Ilaiyaraaja75 – Day 1

இளையராஜா75 – Day 1

தமிழ்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நடத்தும் விழா.

முதல் நாள் இசைக்கச்சேரி இல்லை எனத் தெரிந்ததால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றிருந்தேன்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருவதற்கு தாமதமானதால் 7 மணிக்கு மேல் தான் நிகழ்ச்சி துவங்கியது.

நடிகைகள் சுகாசினி, கஸ்தூரி மேலும் 3 பேர் தொகுத்து வழங்கினார்கள்.

கவர்னர், கமீலா நாசர், பூர்ணிமா பாக்யராஜ் குத்துவிளக்கேற்றி விழாவை துவங்கி வைத்தனர்.

Porna – துவக்க பாடலாக பூர்ணா ஓம் நமசிவாய பாடலுக்கு நடனமாடினர்.

Vedhika – மாங்குயிலே பூங்குயிலே, கண்ணை தொறக்கணும் சாமி என Medley
பாடல்களுக்கு நடனமாடினார். ‘கண்ணை தொறக்கணும் சாமி’ பாடல் போகும் போது வேதிகாவையும் கவர்னரையுமே மாற்றி மாற்றி காட்டி கொண்டிருந்தார்கள்.

இளையராஜா அவர்களுக்கு ‘தங்க வயலின்’ பரிசலிக்கப்பட்டது.

இதற்கு பிறகு வந்த 10 நிமிடங்கள் அட்டகாசமானவை.

Raja, Rahman ஒரே மேடையில்…நின்று பேசி பாடி அசத்தினார்கள். ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலை ராஜா அவர்கள் பாட #ARRahman Keyboard வாசிக்க அட்டகாசமான தருணங்கள்.

Vijay Yesudas –

1. Enakku piditha paadal
2. Oru naal oru kanavu , adhai naan marakkavum mudiyadhu
3. Boobalam isai kkum poomagal oorvalam
4. En iniya pon nilave
5. Poongatru Pudhiranadhu
6. Actor Naren & Vijay – காட்டுக்குயிலு மனசுக்குள்ள

பாடல்களை பாடினார்.

ஆதவன் – பாடகர் Sriram ..பாக்யராஜிடம் போய் பழைய நினைவுகளை கேட்க..அவர் பெரிதாக ஆரம்பிக்க…அவரை பாதியிலேயே கட் செய்தார்கள்.

Iniya & Danie –

1.பச்சரிசி, அச்சு வெல்லம் குத்த தான் வேணும்
2. என் கண்மணி பாடல்களுக்கு ஆடினார்கள்

கோவை சரளா, இயக்குநர் மனோ பாலா, பாண்டி கரகாட்டக்காரன் காமெடியை திரும்ப நடித்தார்கள். இதை பார்க்க கொஞ்சம் பொறுமை வேணும்.

Roopini – சிவராத்திரி, புது மாப்பிள்ளைக்கு பாடல்களுக்கு ஆடினார்.

Karthik , Radha, Manobala – கொஞ்சம் அதிகமாகவே காமெடி செய்கிறேன் என மொக்க போட்டார்கள்.

Manjima Mohan –
‘செவ்வந்தி பூ முடிச்ச செல்லக்கா…’, ‘தங்க சங்கலி …மின்னும் பைங்கிளி’ பாடல்களுக்கு ஆடினார்.

Mansoor Ali Khan க்கு தேவையில்லாத பெரிய Intro. ஆட்டமா தேரோட்டமா பாட்டுக்கு Group Dancer ஐ ஒரு வழி பண்ணினார்.

Ramya Nambeesan ‘கண்ணன் வந்து பாடுகின்றான் காலமெல்லாம்’ தொடங்கி நாலைந்து பாடல்களை தமிழ், ஹிந்தி என பாடினார்.

நடிகர் சிவகுமார் தான் நடித்த படங்களில் இளையராஜா இசையமைத்ததை பற்றி பேசினார்.

LKG படத்தின் Trailer சிவகுமார் அவர்களால் வெளியிடப்பட்டது.

RJ Balaji அருமையாக பேசினார். இந்த விழாவில் என்ன பேச வேண்டும், எப்படி குறைவான நேரத்தில் சரியான விஷயங்களை பகர்ந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து பேசியவர் RJ Balaji மட்டும் தான்.

Namitha late entry.
1. நிலா அது வானத்து மேலே
2. ஆசைய காத்துல துஊதூதுவிட்டு
3. சின்ன பொண்ணு நான் பாடல்களுக்கு செம ஆட்டம் ஆடினார்.

Andrea ‘நேற்று இந்த நேரம் ஆற்றங்கரையோரம்’, ‘வா வா பக்கம் வா’ பாடல்களை பாடினார்.

Vignesh Karthik and Team – இளையராஜா வுடன் இணைந்து பணியாற்றாத பிரபல இயக்குநர்கள் பாடலுக்கு Situation சொல்ல வந்தால் எப்படியிருக்குமென காமெடி skit செய்தார்கள். பார்க்க கொஞ்சம் பொறுமை வேண்டும்.

Nikki Galrani – ‘Chinna chinna vanna kuyil’,
‘Oho.. megam vandhadho’,’Poomalaiyil oru paavai aanadhu’, ‘Kettele ange..Vaango..Naa’ என நான்கு பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார்.

Blaaze, Lady kash வழக்கம் போல் கலக்கலான Rap.

Sayeesha வந்து சில பாடல்களுக்கு ஆடினார்.

#Ilaiyaraaja75 #இசைஞானி #ராகதேவன் #இளையராஜா #ARRahman #TFPC #SunTV

Advertisements

Leave a Reply