சாய் கணேஷூடனான சந்திப்பு

சாய் கணேஷூடனான சந்திப்பு

இன்று(31-May-2026) என்னுடன் கடலூர் பாபா பள்ளியில் படித்த Ganesh Ram Iyer வீட்டுக்கு வந்திருந்தது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

ஆறாவது படிக்கும் போது Guru Raja வினுடைய மிகப்பெரிய ரசிகன் சாய் கணேஷ்.

Naughty யான குரு பின்னால் இருந்து அடித்து விட்டு என் மீது பழியைப் போட்டு விடுவான்.

நான் அடித்தது போல் என்னை முறைப்பதே சாய் கணேஷ் வேலையாக இருக்கும்.

ஒரு கட்டத்தில் தன்னை பின்னால் இருந்து அடிப்பது குரு தான் எனத் தெரிந்தும் என்னையே முறைப்பான்.

குருவை – ராஜா வை போலவே மனதில் உருவகம் செய்து வைத்திருந்தான் சாய் கணேஷ்.

இன்று வரை என் நலம் விரும்பி – சாய் கணேஷ்.

வருடங்கள் ஆக ஆக குருவிடமிருந்து என்னுடைய ரசிகனாகவும் மாறி விட்டான்.

புத்தகங்கள், பழைய School Photos, Keyboard இல் அவனுக்கு திரைப்பாடல்கள் வாசித்து காட்டியது என நேரம் சென்றது.

பழைய நாணயங்கள், antique notes and coins பார்த்தது அதை பற்றி பேசுவது அவனுக்கு பிடித்திருந்தது.

என்னிடம் இருந்த பழைய நாணயங்கள் மட்டும் நோட்டுகள் (1800 முதல் வெளிவந்த நாணயங்கள், நோட்டுகள்) பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

20 பைசா மற்றும் 2 பைசா, 3 பைசா அவனை கவர்ந்த காசுகளாக இருந்தது.

இந்த ஞாயிறு பள்ளி நண்பனின் வருகையால் சிறப்பான ஞாயிறாக மாறியிருந்தது.

#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.