




“RealOG” – இயக்குநர், படத்தொகுப்பாளர் B. லெனின் சார் – Time Signature க்கு ஏற்றவாறு Editing செய்வது
சென்ற மாதம் 12-Jan-2026(வியாழக்கிழமை)
லெனின் சார் 3 முறை அழைத்திருந்தார்.
AI ஃபிலிம் மேக்கிங் புத்தக வெளியீட்டு விழாவில் இருந்ததால் அவருடைய அழைப்பை ஏற்க முடியவில்லை.
“நீ எங்க இருக்க? மூணு மணிக்கு வந்து பாரு ”
உரிமையோடு என்னிடம் பேச ஆரம்பித்திருந்தார்.
நான் வீட்டுக்கு போய் பொறுமையாக அவரைத் திரும்ப அழைத்தேன்.
லெனின் சார் –
– 5 தேசிய விருதுகள் (2 இயக்கத்துக்கு – ஊருக்கு நூறு பேர், Knock Out )
– 3 தேசிய விருதுகள் Editing க்கு
– 5 மாநில விருதுகள் – படத்தொகுப்புக்கு, தமிழ்நாடு, கேரள அரசுகளின் விருதுகள் வென்றவர்.
லெனின் சார் சொல்வதை பணிவோடு கேட்க வேண்டும், அவர் எனக்கு கற்றுக் கொடுப்பதற்காக அழைக்கிறார் என மனம் திரும்ப திரும்ப சொல்லியது.
எப்படியும் பெருக்கி, பாத்திரம் தேய்த்து, Exercise, சமையல் என வீட்டு வேலைகள் காலைப் பொழுதை எடுத்துக் கொள்ளும்.
அடுத்த நாள் மதியம் 12 மணிக்கு வந்து அவரை சந்திக்க வரலாமா எனக்கேட்டு
ஏஜி சிவகுமாரிடம் லெனின் சார் அழைத்ததை பற்றி கூறி இந்த முறை நான் அங்கே ஏதாவது ஜோக்/Counter அடித்து விடக் கூடாது, பதட்டப்படவும் கூடாது…நீங்களும் வர்றீங்களா என கேட்டிருந்தேன்.
ஏஜி சிவகுமாரும் என்னுடன் வருவார் என அவரைப் பற்றி சொல்லி லெனின் சாரிடம் சம்மதம் வாங்கியிருந்தேன்.
அடுத்த நாள்… அவருடைய அலுவலகத்திற்கு AG Sivakumar உடன் நேரத்திற்கு செல்ல முடிந்தது.
லெனின் சார் வரவேற்று தன்னுடனிருந்த Vijeesh mani என்ற மலையாள இயக்குநரை அறிமுகப்படுத்தினார்.
Vijeesh mani யுடைய…”mm” என்ற படத்தின் எடிட்டிங் எப்படி கையாளப்பட்டது என லெனின் சார் எங்களுக்கு விளக்க ஆரம்பித்தார்.
மாணவனாய் கேட்க ஆரம்பித்தேன்.
செம்மலர் அன்னத்தை திரையில் பார்த்ததும் இது ஒரு சிறப்பான திரைப்படமாக இருக்க வேண்டும் எனத் தோன்றியது.
ஏற்கனவே செம்மலர் அன்னம் நடித்து
1. ” சவடால்” (விருது பெற்ற குறும்படம், கந்தர்வனுடைய சிறுகதை),
2. “பலாப்பழம்” (குறும்படம், வண்ணநிலவன் சிறுகதை, முரளி திருஞானம் இயக்கியது)
பார்த்திருந்தேன்.
Footballer விஜயன் காட்டில் தேன் எடுக்க செல்லும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
லெனின் சார் படம் முழுக்க முழுக்க கேரளாவின் அட்டப்பாடியில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லி எடிட்டிங்கை பொறுத்தவரை இந்த படத்தை அவர் எப்படி கையாண்டார் என்றும் சில காட்சிகளை மேலும் மெருகேற்றிய விதம் பற்றி எனக்கும், AG Sivakumar க்கும் போட்டு காட்டினார்.
ஒரு Gospel music album உம் எடிட் செய்து கொண்டிருந்தார்.
அதில் Correction களை உதவியாளருக்கு கூறி சரி செய்து கொண்டிருந்தார்.
இந்த இசை ஆல்பத்தை பொறுத்தவரை ஒலிக்கும் பாடலின் Time Signature க்கு ஏற்றவாறு எப்படி எடிட்டிங் கையாளப்பட்டது என Live ஆக ஒரு demo கொடுத்தார்.
இசையை பொறுத்தவரை 4/4, 3/4, 6/8 என time signature க்கு ஏற்றவாறு பாடல்களின் ஓட்டம் இருக்கும்.
அந்த ஓட்டத்தை பிடித்துக் கொண்டு அதே pace இல் Editing ஐ தான் கையாண்ட விதத்தை எங்களுக்கு கூறினார்.
ஒரு அட்டகாசமான வகுப்பெடுத்தார் என்றே கூற வேண்டும்.
ஒரு துரோணன் கர்ணனாக பாவித்து எனக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
“சப்பாத்தி சாப்பிடறியா? Lunch சாப்பிடறியா இங்கே” என உரிமையோடும் அன்போடும் கேட்டார்.
லெனின் சார் துரோணாச்சாரியார் விருதும் வென்றவர்.
அந்த துரோணனுக்கு தானே தெரியும் ஊரிலுள்ள நூறு பேரில் கர்ணன் யாரென்று.
Films and fans கடிகாரமும், டைரியும் கொடுத்து விட்டு அந்த துரோணரின் காலில் விழுந்து ஆசி பெற்று கிளம்பினேன்.
#Director
#Editor
#BLenin
#இயக்குநர்
#படத்தொகுப்பாளர்
#லெனின்
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.