தென்னிந்திய திருநங்கைகள் அழகிப் போட்டி – Season 8

தென்னிந்திய திருநங்கைகள் அழகிப் போட்டி – Season 8

தென்னிந்திய திருநங்கைகள் அழகிப் போட்டி – Season 8 வியாழக்கிழமை(03-Oct-2024) அன்று Born2Win அமைப்பின் சார்பில் எழும்பூர் கன்னிமாரா நூலகத்திலுள்ள Museum Theatre இல் நடைபெற்றது.

இந்நிகழ்வை நங்கை Swetha Sudhakar  மிக அழகாக வடிவமைத்திருந்தார்.

ஒலி, ஒளி, மலர்கள், பேனர்கள் என நிகழ்வுக்கான எல்லா விஷயங்களிலும் அசத்தியிருந்தார் ஸ்வேதா.

மழை கொஞ்சம் எட்டிப்பார்த்தாலும் அரங்கில் உற்சாகமாக பலர் குவியத் தொடங்கியிருந்தனர்.

நிகழ்வு தொடங்குவதற்கு முன் ஓவியர் Shyam Sankar உடன் பேசிய உரையாடல்கள் ஸ்வாரசியமானவை.

ஓவியராக சிறுகதைகள், நாவல் போன்ற படைப்புகளை அவர் எப்படி அணுகுகிறார்
ஒவ்வொரு வாரமும் வரும் தொடர்கதைகளுக்கான ஓவியங்கள், கதைகளின் மாந்தர்களை அவர் எப்படி கிரகித்துக் கொண்டு வண்ணங்களாக மாற்றுகிறார் என்பதை விவரித்தார்.

மேலும் எடுத்தவுடன் tools ஐ பயன்படுத்தாமல் manual வரைபடங்களாக வரைந்து பிறகு அதை மெருகேற்ற மட்டுமே டெக்னாலஜி பயன்படுத்துவதை பற்றி விளக்கினார்.

அழகிப்பொட்டி தாரைத் தப்பட்டையுடன் மிக விமர்சையாக தொடங்கியது.

மலரலங்காரம், விளக்கலங்காரம் என பெரிய டீம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

நிகழ்ச்சியை திரு. ராதாகிருஷ்ணன் IAS மற்றும் விருந்தினர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

முந்தைய சீசன்களில் வெற்றி பெற்ற அழகிகளின் Rampwalk, பாடல்கள் என நிகழ்ச்சி களைகட்ட தொடங்கியது.

நங்கை ஸ்வேதா மற்றும் விஜய் தொகுப்பாளர்களாக மிகச் சிறப்பாக இந்த நிகழ்வை எடுத்துச் சென்றனர்.

14 போட்டியாளர்களும் முதல் Round traditional round ஆகவும், இரண்டாவது Round இல் western dresses என அழகாக உடையணிந்து Rampwalk செய்தனர்.

வந்திருந்த விருந்தினர்களில் திரு. ராதாகிருஷ்ணன் IAS, கருண் ராமன், வைரம் தேவர் அவர்கள், நடிகை ரேகா மற்றும் நடிகை மிலாவிடம் பேச முடிந்தது.

சிறப்பான நிகழ்வை சரியாக திட்டமிட்டு நடத்தி முடித்திருக்கும் நங்கை ஸ்வேதாவிற்கும் , வெற்றியாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு விடைபெற்றேன்.

#Born2win
#born2winswetha
#MissSouthIndiaTransQueen2024
#தென்னிந்தியதிருநங்கைஅழகிப்போட்டி2024
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankaJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

One comment

Leave a reply to mylottnicolai1993 Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.