Anti Indian Film Review – Blue Sattai Maaran – ஒரு மரணத்தின் மூலம் சமூக அவலங்களை கூறுதல்


Anti Indian Film Review – Blue Sattai Maaran – ஒரு மரணத்தின் மூலம் சமூக அவலங்களை கூறுதல்

ஒரு மரணம் அதைத் தொடர்ந்து நடக்கும் மதங்களின் அரசியல், இடைத்தேர்தலில் கட்சிகள் நடத்தும் வாக்கு வங்கி அரசியல், உச்ச நடிகர்களின் டிவிட்டர் அரசியல் என சமூக அவலங்களை நம் கண் முன் விறுவிறுப்பு குறையாமல் நிதர்சனமாக காட்டியுள்ளார் Blue Sattai Maaran அவர்கள்.

முதல் 30 நிமிடங்களில் நம்மை கவர்வது பிண்ணனி இசை மற்றும் HeliCam shots. இவர் எப்படி இப்படியொரு பிண்ணனி இசையமைத்தார் என வியக்க வைத்தது.

மாறன் மற்றும் AG Sivakumar இணைந்து பணியாற்றுகிறார்கள் என்றால் வசனங்கள் சிறப்பாகவும், நையாண்டிகளும் நிறைந்து இருக்கும் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடுகிறார்கள். வசனங்கள், “பஞ்ச் “கள் அருமை.

கில்லி மாறன் பேசும் பஞ்ச் வசனங்களில் சிரிப்பலை.

நடிகர்களின் தேர்வு பல காட்சிகளுக்கு பொருத்தமாகவும், வலுசேர்ப்பதாகவும் இருந்தது.

வேலு பிரபாகரன், ஏழுமலை யாக நடித்தவர், “ஆடுகளம்” நரேன், சரோஜா வாக நடித்தவர், ராதா ரவி, “பசி” சத்யா, கில்லி மாறன், “வழக்கு எண்” முத்துராமன், #KPYBala, சுரேஷ் சக்ரவர்த்தி, ஸ்நேபா என நடிகர்கள் சிறப்பாக தனது கதாப்பாத்திரங்களை செய்திருந்தனர்.

கதை நடக்கும் பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை தத்ரூபமாக காட்டியிருந்தனர். ஒளிப்பதிவாளர் கதிரவன் மற்றும் கலை இயக்குநர் சுதர்சன் இருவரின் மெனக்கெடல் படம் முழுக்க பிரதிபலித்தது.

உதவி இசையமைப்பாளர் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர் பாராட்டுக்குரியவர்கள்.

இடைவேளைக்கு பிறகு வரும் 3 கானா பாடல்கள் அதன் நடுவே கலெக்டர் , தாசில்தார், நரேன் பேசும் காட்சிகள் சிறு தொய்வை ஏற்படுத்தியது.‌ இதைத்தவிர எந்த இடத்திலும் விறுவிறுப்பு குறையவில்லை.

ஹீரோ, ஹீரோயின், வில்லன், நாம் இது வரை பார்த்த Cliche காட்சிகள் ஏதுமில்லாமல் ஒரு மாறுபட்ட சிறந்த திரையனுபவம் #AntiIndian

இந்த படம் மூலம் வசனகர்த்தா, உதவி இயக்குனராக உருவெடுத்திருக்கும் AGS அவர்கள் மற்றும் இயக்குநராகிருக்கும் Blue Sattai Maaran அவர்கள் மேலும் பல படங்களில் சிறப்பாக மிளிர என் வாழ்த்துகள்.

#ஆன்டிஇண்டியன் #ப்ளுசட்டைமாறன்
#AntiIndian
#AntiIndianFilmReview
#AntiIndianReview
#BlueShirtMaran
#AGSivakumar
#BlueSattaiMaaran
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

ஆன்டி இண்டியன் – Blue Sattai Maaran

Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.