Assembling Table Fan
புதிதாக டேபிள் ஃபென் ஆர்டர் செய்து இன்று வந்தது. இதை Assemble செய்ய மட்டும் Electrician ஐ கூப்பிட வேண்டுமா என யோசித்தேன். நாமே இதை செய்து முடிப்போம் என அசெம்பிளிங் Instructions ஐ படித்தேன். வேண்டாம் என ஒரு எண்ணமும் அசெம்பிள் செஞ்சு தான் பாப்போமே என இன்னொரு இன்னமும் தோன்ற, Screw Driver, Tape, Rim இரண்டையும் தற்காலிமாக கட்ட நூல் என எடுத்துக் கொண்டு களத்தில் இறங்கினேன்.

ஒன்றரை மணிநேரம் ஆனது.
Front Guard மற்றும் Rear Guard ஐ Rim கொண்டு தனி ஒருவனாக இணைக்க முடியவில்லை. சில நூல்களை எடுத்து Front Guard, Rear Guard ஐ முதலில் கட்டி பிறகு Rim வைத்து Screwக்களை Tight செய்தேன். முழுதாக வியர்த்து நனைந்திருந்தேன். ஆனால் ஒரு விஷயத்தை சுயமாக செய்து முடித்த திருப்தி கிடைத்தது.