100 சிறந்த சிறுகதைகள் – பாகம் 1 – தொகுப்பு : எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தொகுத்திருக்கும் 100 சிறந்த சிறுகதைகள். இதில் முதல் பாகத்தில் உள்ள 50 சிறுகதைகள் படித்து முடித்தேன்.
எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, தி. ஜானகிராமன், வண்ணநிலவன், அசோகமித்திரன், கு. அழகிரிசாமி, சுஜாதா கதைகள் அருமை.

சிறுகதைகள் அனைத்தும் 1940 முதல் 1980 காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகள் என வரையறுக்கலாம். இந்த பாகம் ஒன்றை பொருத்தவரை எழுத்தாளர்களில் சிலர் மட்டுமே உயிரோடு உள்ளனர்.
50 சிறுகதைகளில் எனக்கு பிடித்த 21 சிறுகதைகளை கீழே வரிசைப்படத்தியிருக்கிறேன் .ஒவ்வொரு கதைகளை பற்றியும் விரிவாக பிறகு எழுத வேண்டும்.
ராஜா வந்திருக்கிறார், பிரசாதம், கதவு, நகரம் கதைகள் அட்டகாசம்.
1. ராஜா வந்திருக்கிறார் – கு.அழகிரிசாமி
2. பிரசாதம் – சுந்தர ராமசாமி
3. விகாசம் – சுந்தர ராமசாமி
4. கதவு – கி.ராஜநாராயணன்
5. நகரம் – சுஜாதா
6. பாயசம்- தி. ஜானகிராமன்
7. பஞ்சத்து ஆண்டி – தி. ஜானகிராமன்
8. குருபீடம் – ஜெயகாந்தன்
9. முன்நிலவும் , பின்பணியும் – ஜெயகாந்தன்
10. நாயனம் – ஆ. மாதவன்
11. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்
12. பலாப்பழம் – வண்ணநிலவன்
13. எஸ்தர் – வண்ணநிலவன்
14. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி
15. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
16. பாற்கடல் – லா.ச.ராமாமிருதம்
17. அழியாச்சுடர் – மெளனி
18. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் – புதுமைப்பித்தன்
19. காடன் கண்டது – பிரமீள்
20. மகாராஜாவின ரயில் வண்டி – அ. முத்துலிங்கம்
21. புற்றிலுறையும் பாம்புகள் – ராஜேந்திர சோழன்
100 சிறந்த சிறுகதைகள் – பாகம் 2 – தொகுப்பு: எஸ்.ராமகிருஷ்ணன். படித்து விட்டீர்களா.உங்களுக்கு பிடித்த கதைகள் எவை
LikeLike