Sumi Hari – கொற்கை – பட்டாம்பூச்சி – Kindle – Joe D’ Cruz
Sumi Hari – பெண்களிலயே சிறந்த புத்தகங்களை பல ஆண்டுகளாக படித்து பதிவிடும் ஆழ்ந்த வாசிப்பாளர் என கண்டிப்பாக கூறலாம்.
கருணாமூர்த்தி சார் போல் பெண்களை பொறுத்தவரை Sumi Hari.
அவர் தேர்ந்தெடுத்து படிக்கும் புத்தகங்கள் அனைத்தும் தரமானவை.
‘கொற்கை’ நாவலை படித்து அட்டகாசமான ஒரு வாசிப்பனுபவம் 2018 இல் எழுதியிருந்தார்.
2013 இல் #SahityaAkademi விருது வென்ற நாவல் ஜோ டி குருஸ் எழுதிய ” கொற்கை”.
தூத்துக்குடி மாவட்ட கடல்சார் பரதவர் சமூகத்தின் நூறாண்டு கால வாழ்க்கையை பேசும் நாவல். அவர்களின் மாற்றத்தை சித்தரிக்கும் நாவல்.
தலையணை Size இல் இருந்த நாவலை வீம்புக்கு வாங்கி படித்தே தீர வேண்டும் என வாரக் கடைசியில் உட்கார்ந்தால் அந்த நாவலை கையில் வைத்து படிக்கவே முடியவில்லை.
60 பக்கங்களுக்கு மேல் நான் தாண்டவில்லை.
Sumi Hari – ‘கொற்கை’ நாவலை படித்து அட்டகாசமான ஒரு வாசிப்பனுபவம் எழுதியிருந்தார்.
நம்மால் முடியாததை ஒருவர் செய்து முடித்தால் நமக்கு அவர்கள் எப்படி செய்து முடித்தார்கள் என்ற ஆர்வமும் அவர்களை ரொம்ப பிடிக்கவும் ஆரம்பித்து விடும்.
Kindle வந்த பிறகு பெரிய நாவலை கையில் சுமந்து படிக்கும் கஷ்டம் இனி இல்லை என்றானது.
அதனால் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ள நாவல்களான
1. கொற்கை – ஜோ டி குருஸ்
2. பட்டாம்பூச்சி – ரா கி ரங்கராஜன்
இந்த இரண்டு 1000+ பக்க நாவல்களை Kindle மூலமாக படித்து பதிவிட்டிருந்தார்.
Sumi Hari அவர்களுடைய ‘கொற்கை’ நாவல் வாசிப்பனுபவம் படித்தவுடன் உடனே அவருக்கு கால் செய்து பேசினேன்.
அன்றிலிருந்து அவரோடு நல்ல நட்பு எனக்குண்டு.
‘தொட்டனைத்தூறும் மணற்கேணி ‘ கவிதை நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களை சந்தித்து பேச முடிந்தது.
அப்போது “கொற்கை” வாங்கிய கதையும், Sumi Hari அதற்கு வாசிப்பனுபவம் எழுதியதை பற்றியும் அவருக்கு பகிர்ந்தேன்.
ஜோ டி குரூஸ் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.
பூர்வீகம் கேரளா என்பதால் அவர் மலையாள புத்தகங்களையும் படித்து பதிவிடுகிறார்.
Sumi Hari அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
#SumiHari
#சுமிஹரி
#கொற்கை
#ஜோடிகுரூஸ்
#JoeDiCruz
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.