





































“தலைவரோட ஆடு” – பாஞ்சாலி – இயக்குநர் சுப்ரமணிய பாரதி- பரோட்டா கணேசன்- திரைமொழி முப்பெரும் விழா
திரைமொழி முப்பெரும் விழாவில் இயக்குநர் ராசி அழகப்பன் மற்றும் இயக்குநர் Brindha Sarathy பிருந்தா சாரதி அண்ணன் இருவரையும் எதிர்பார்த்து சென்றிருந்தேன்.
ஆனால் அங்கே பேசிக் கொண்டிருந்தது இயக்குநர் சங்க தலைவர், FEFSI சங்கத் தலைவர், இயக்குநர் RK Selvamani Rk Selvamani அவர்களும், இயக்குநர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இயக்குநர் RV Uthayakumar Dir RV Uthayakumar அவர்களும்.
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் “ஸ்டாலின் குணசேகரன்” Stalin Gunasekaran T மற்றும் பல சிறந்த பேச்சாளர்கள் நிறைந்த திரைமொழி முப்பெரும் விழா.
இயக்குநர் ராசி அழகப்பன் Azhagappan Rasi சார் இருக்கும் இடம் கலகலப்பாகவே இருக்கும்.
2020 இல் என்னுடைய “ரப்பர் வளையல்கள்” சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர் இயக்குநர் கவிஞர் ராசி.அழகப்பன்.
அவரை சந்தித்து டைரி கொடுத்து பேசும் போது ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கு அதை வழங்க சொன்னார்.
அவருக்கும் இருக்கிறது என விழா அரங்கினுள் மாட்டிக் கொண்ட Bag இல் இருந்து சில டைரி களை எடுத்து வந்து
ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கும், என் பெயரைக் கொண்ட “Script Writer” சிவசங்கருக்கும் Siva Sankar , இயக்குநர் ராஜகோபால் மாரியப்பனுக்கும் Rajagopal Mariappan டைரியை கொடுத்தேன்.
கவிஞர் , பாடலாசிரியர் Srv Mathuraa மதுரா என்னிடம் வந்து அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவருக்கும் டைரி கொடுத்து விட்டு அரங்கினுள் மீண்டும் சென்றேன்.
இயக்குநர் சங்க தலைவர் RK Selvamani அவர்கள் மனிதம் இறந்து விட்டதை பற்றி பேச ஆரம்பித்தவர் தன் வாழ்வில் நடந்த இரண்டு, மூன்று நிகழ்வுகளை பகிர்ந்தார்.
“ஒருவருக்கு accident ஆனால் அவரை ஒரு ஊரே மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு சென்ற காலம் போய்…
நாம் இப்போது ஒரு accident ஐ பார்த்தால் ஒரு நொடி உச்சு கொட்டி விட்டு கடந்து செல்லும் மனிதர்களாகி விட்டோம்” என ஆதங்கபட்டார்.
திரை மொழி சமூக நல அறக்கட்டளைக்கு ₹10,000 நிதி உதவி வழங்கினார்.
நிகழ்வில் பொன்சீ அண்ணாவிற்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். பாஞ்சாலி குறும்பட குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இயக்குநர் சுப்ரமணிய பாரதி இயக்கிய பாஞ்சாலி – குறும்படம் அருமை.
“தலைவரின் ஆடு கூட ஜாதி பார்த்து கூட வேண்டும்” என எண்ணும் கிராமத்து பிற்போக்குத்தனங்களை இவருக்கே உரிய பாணியில் எளிமையாக அழுத்தமாக சொல்லியிருந்தார்.
தலைவர் வளர்க்கும் ஆட்டின் பெயர் “பாஞ்சாலி”. அதை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் பரோட்டா கணேசன் வளர்க்கும் மற்றொரு ஆட்டிற்கு பரோட்டா கணேசனின் பேரன் பெயர் வைக்கிறார்.
😂அந்த ஆட்டின் பெயர் “சிம்பு”.😂
😂 இயக்குநர் சுப்ரமணிய பாரதி, நக்கல் சார் உங்களுக்கு. 😂
அவருடன் சிறிது நேரம் பேச முடிந்தது. திரை மொழி பிப்ரவரி மாத இதழில் இடம் பெற்ற கட்டுரைகளையும், அதை முழுமையாக படித்ததை பகிர்ந்தேன்.
இயக்குநர் ஹரிஹரன் அண்ணா Discovery Book Palace இல் ரெகுலராக வலம் வருபவர். நம்ம favourite. அவரையும் சந்தித்து நலம் விசாரித்தேன்.
‘பாஞ்சாலி’ குறும்படத்தில் நடித்த பரோட்டா கணேசன் அவர்களை நிறைய பேர் பாரதி ராஜா படங்களில் வந்த நடிகர் வீராச்சாமியோடு குழப்பி கொள்கிறார்கள்.
மணிசேகரன் Manisekaran அவர்களும் , பிரஹாஷ் அர்ஜூன் PrahashArjun அவர்களும் ஏற்கனவே நடிகர் வீராச்சாமி அவர்களை பற்றி நம் குழுக்களில் எழுதியிருக்கிறார்கள்.
உருவ ஒற்றுமை கொண்ட “பரோட்டா கணேசனும்” வீராசாமி அவர்களை போல சிறந்த நடிப்பை திரைப்படங்களில் அளிக்க வேண்டும் என்று அவரை வாழ்த்தி டைரி அளித்து விட்டு கிளம்பினேன்.
#திரைமொழி
#திரைமொழிடாக்கீஸ்
#இயக்குநர்சுப்ரமணியபாரதி
#இயக்குநர்செல்வமணி
#DirectorRKSelvamani
#DirectorRVUthayakumar
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.