








ஒரே நேரத்தில் இரு நிகழ்வுகளின் விருந்தினர்களாக நிகழ்வுகளை கலகலப்பாக்கிய இயக்குநர் கவிஞர்கள் ராசி அழகப்பன் மற்றும் இயக்குநர் அண்ணன் பிருந்தா சாரதி
இயக்குநர், கவிஞர் Azhagappan Rasi மற்றும் இயக்குநர் அண்ணன் பிருந்தா சாரதி Brindha Sarathy இருவரும் கலந்து கொள்ளும் நிகழ்வுகள் என்பதால் இந்த நிகழ்வுகளுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்.
“ரப்பர் வளையல்கள்” சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர் இயக்குநர் கவிஞர் ராசி. அழகப்பன்.
பிருந்தா அண்ணனும் இரு நிகழ்வுகளிலும் விருந்தினராக இருந்தார்.
எப்படி ஒரே நேரத்தில் நடக்க இருக்கும் நிகழ்வுகளில் இவர்கள் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற ஆர்வம் மேலோங்கியது.
–முதல் நிகழ்வு – திரை மொழி முப்பெரும் விழா
— இரண்டாம் நிகழ்வு – பக்கத்து அரங்கில் நெடுந்தீவு சபேசனின் – “கேட்காமல் தரலாம்” கவிதை நூல் வெளியீட்டு விழா.
முதல் ஒன்றரை மணி நேரத்தை கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று விட்டு இரண்டாவது அரங்கிற்கு அதே உற்சாகத்துடன் வந்து விட்டார்கள்.
ராசி சார் தான் இருக்கும் இடத்தையே கலகலப்பாக மாற்றக் கூடியவர்.
நேற்று(29-Mar-2026) மாலையும் அவருக்கு ஒரு field day என கண்டிப்பாக கூறலாம்.
இயக்குநர் அண்ணன் பிருந்தா சாரதி அவர்கள் 12 நிமிடங்கள் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றினார்.
புத்தகத்திலிருந்தும் கவிதைகளை படித்து மேற்கோள் காட்டி தன் உரையை முடித்தார்.
திரை மொழி முப்பெரும் விழாவில் நேரம் காரணமாக சுருக்கமாக உரையை 3 நிமிடத்திற்குள் முடித்துக் கொண்டார்.
கவிதை நூல் வெளியீட்டு விழாவில் சுருக்கமாக முடித்துக் கொண்ட இயக்குநர் ராசி. அழகப்பன், திரைமொழியில் திரையிடப்பட்ட “பாஞ்சாலி” குறும்படம் பற்றியும் சுப்ரமணிய பாரதியின் முன்னெடுப்புகளை வாழ்த்தியும் பேசினார்.
நிகழ்வில் இரு இயக்குநர், கவிஞர்களின் Chemistry யும் அட்டகாசம். படங்களே சாட்சி.
#இயக்குநர்
#கவிஞர்
#ராசிஅழகப்பன்
#DirectorRasiAzhagappan
#இயக்குநர்பிருந்தாசாரதி
#DirectorBrindhaSarathy
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.