சிங்கப்பெண்ணே விருதுகள் 2026 – ரோஸ்லின் சார்லஸ் மற்றும் ஏஞ்சல் ஃபிலோமினா – இளம் குரல்

சிங்கப்பெண்ணே விருதுகள் 2026 – ரோஸ்லின் சார்லஸ் மற்றும் ஏஞ்சல் ஃபிலோமினா – இளம் குரல்

இளம் குரல் சிங்கப்பெண்ணே விருதுகளுக்கு இருவரை Nominate செய்கிறேன் என சுரேஷிடம் முன்னரே சொல்லியிருந்தேன். அவரும் சம்மதித்திருந்தார்.

ஆனால் வீடு தேடுவது, காலி செய்வது பிப்ரவரியின் பாதி நாட்களை எடுத்துக் கொண்டது.



புதிய வீட்டில் பொருட்களை அடுக்கி வைப்பது, பெருக்குவது, அலங்கரிப்பது, மார்ச்சின் பாதி நாட்களை எடுத்துக் கொண்டது.

இளம் குரல் சிங்கப்பெண்ணே விழா தாமதமானதில் எனக்கு Nominate செய்வதற்கு அவகாசம் இருந்தது.

ரோஸ்லின் சார்லஸ் – ரோஸ்லின் கணவரோடு இணைந்து அந்தமானில் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் என பலருக்கு உதவி செய்து வந்தாள்.

புயலோ, மழையோ வந்தால் இங்கிருந்து அந்தமானுக்கு காய்கறிகளே செல்லாது.

அத்தியாவசிய பொருட்கள், உணவில்லாமல் கஷ்டப்படும் பலருக்கு ரோஸ்லின் உதவி செய்திருக்கிறாள். ரோஸ்லினை இந்த வருடம் சிங்கப்பெண்ணே விருதுக்கு Nominate செய்ய முடிந்தது.

நேற்று குடும்பத்தோடு என் வீட்டிற்கு வந்து அங்கிருந்து விழாவிற்கு கிளம்பினோம்.

கணவர் சார்லஸுடைய  துணை, அக்கறை ரோஸ்லினின் பெரிய பலம்.

ஏஞ்சல் ஃபிலோமினா – 90 களில் மணிரத்னம், PC Sreeram மற்றும் நடிகை இயக்குநர் ரேவதி அவர்களுடைய படங்களுக்கு உதவி இயக்குநராக, ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

தற்போது LVP இல் Creative Director.

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் அமைப்பின் செயல் தலைவராகவும் இருக்கிறார்.

இவரை @செழியன் அண்ணாவுடைய 34 திரைப்படங்கள் தொடக்க விழாவில் சந்தித்து பேசிய போது “சிவஷங்கர் ஜெகதீசன் foundation” awards பற்றியும் இந்த சிங்கப்பெண்ணே விருதுகள் பற்றியும் சொல்லி உங்களை Nominate செய்கிறேன் என கூறியிருந்தேன்.

அவருக்கும் நேற்றைய விழாவில் விருந்தளிக்கப்பட்டது.

ஏஞ்சல் ஃபிலோமினா அவர்களுக்கு நிகழ்வு நடந்த விதம் மிகவும் பிடித்திருந்தது.

பரத நாட்டிய கலைஞர்கள், கொன்றை வேந்தன் சொன்ன சிறுமி என நிறைய பேரை அழைத்து பேசினார்.

இருவருக்கும் விருதளித்த இளம் குரல் சுரேஷ் அவர்களுக்கும் இளம் குரல் அமைப்பினருக்கும் என் நன்றிகள்.

#சிங்கபெண்ணேவிருதுகள்2026
#SingapenneAwards2026
#RoselineCharles
#ரோஸ்லின்சார்லஸ்
#ஏஞ்சல்ஃபிலோமினா
#AngelPhilomena
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.