Go Native Whitefield – Arattai – Apple Malpua – Antique

Go Native Whitefield – Arattai – Apple Malpua – Antique

நித்யா சொன்ன go native Whitefield ஒரு mini market complex போலிருந்தது.

அமைதியான சூழலில் Antique கடைகள், அதையடுத்து உள்ளேயே restaurant என வடிவமைக்கப்பட்டிருந்தது‌.

இம்முறை நித்யாவுடனான அரட்டை ரொம்ப சீரியஸான அரட்டை யாக இருந்தது.

போக்குவரத்து நெரிசல், அவளது குழந்தைகளின் எதிர்காலம், ஆன்மிகம், வைணவம், fitness, feng shui, வாஸ்து என சென்றது.

நித்யா Metabolism Booster drink order செய்திருந்தாள்.

16 மணிநேரம் சாப்பிடாமல் இருந்ததால் செம பசியெனக்கு.

1. Phulka – Mushroom Masala
2. Thin Wheat Crust – Garden fresh Pizza

என healthy ஆன recipe பார்த்து பார்த்து order செய்தேன்.

அரட்டை சிவன் கோவில்கள், பெங்களுரில் உள்ள 108 அடி கோதண்டராமர் , அவளுடைய housing society பற்றி என போய்க் கொண்டிருந்தது‌.

Bengaluru metro வின் 3 வழித்தடங்களை பற்றியும் interconnecting stations பற்றியும் விவரிக்க ஆரம்பித்திருந்தாள்.

A/C அதிகமாக இருப்பதாக தோன்றவே அதை குறைக்க சொல்லி விட்டு Hot water கேட்டு வாங்கி குடித்துக் கொண்டே பேச்சை கேட்க ஆரம்பித்தேன்.

Tippu Sultan palace, Bengaluru Palace, Library போக வேண்டும் என நினைத்திருந்தேன் அது எவ்வளவு தூரம் என விசாரித்து தெரிந்து கொண்டேன்.

Dessert order செய்ய மீண்டும் menu வை வாங்கினால்..Apple Malpua திரும்ப திரும்ப வந்து கொண்டிருந்தது.

Order செய்தேன்.

Apple slices, மாதுளம் பழம் தூவி எடுத்து வரபப்பட்ட Apple Malpua வில்

ஆப்பிளை தூக்கி மைதாவில் பிரட்டி எண்ணெயில் பொறித்து.. கொஞ்சம் அரைத்த ஆப்பிளை(Apple puree) மேலே கொட்டி, ஆப்பிள் slices தனியாக வைத்து என இருந்தது.

மைதா இல்லாமல் செய்திருந்தால் பரிந்துரைக்க சரியான dessert இது.

சாப்பிட்டு bill pay பண்ணிட்டு Antique கடைகளில் உள்ள fengshui items பற்றி பேச ஆரம்பித்தோம்.

Feng shui ஐ பொறுத்தவரை egmore Alsa Mall/Prince plaza வில்‌ உள்ள ஒரு feng shui கடையில் Dec-2025 சென்றிருந்தேன்.

Feng shui expert ஆக‌ இருந்த பெண்மணி சில பொருட்களையும் அது வீட்டிலிருந்தால் என்ன நன்மை என சொல்லியிருந்தார்.

அதை பகிர்ந்து கொண்டு Crystal Tortoise, Yin Yang , மகாலக்ஷ்மி என Antique பொருட்களை பார்க்க பார்க்க வாஸ்து, feng shui எனப் பேசிக் கொண்டே வெளியே வந்து விடைபெற்று கிளம்பினேன்.

#GoNativeWhitefield
#Bengaluru
#பெங்களூரு
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.