No fracture – தொடர் வெந்நீர் ஒத்தடங்கள் – Crepe Bandage – Walking Stick
Sooriya Hospital இல் ஒரு advantage இருக்கிறது. சீக்கிரமாகவே emergency இல் இருக்கும் டாக்டரை பார்த்து வைத்தியம் கேட்டு, ஊசி போட்டு , மாத்திரைகள் வாங்கி 10-15 நிமிடத்திற்குள் வீட்டிற்கு வந்து விடலாம்.
Form fill செய்ய சொல்லும் தொந்தரவுகள் இருக்காது.
பாத்திரம் தேய்த்து, வாஷிங் மெஷினில் இருக்கும் ஈரத்துணிகளை எடுத்து dryer stand இல் போட்டு,
காய்ந்த துணிகளை மடித்து வைத்து, பிறகு ஏனோ தானோ என ஒன்றை வானலியில் கிளறி, சாப்பிட்டு கிளம்புவதற்கு 1 மணி ஆகி விடும் என காலையிலேயே மதியம் 1 மணிக்கு கிளம்பலாம் என முடிவு செய்திருந்தேன்.
வலது முட்டியில் பயங்கர வலி.
படி ஏறி/இறங்கும் போதும் , Un even surfaces களிலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியிருக்கிறது.
வண்டி ஓட்டும் போது வலது காலை வைத்து ஊன்றினால் பயங்கரமான முட்டி வலியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
Sooriya Hospital இல் Xray எடுக்க சொன்னார்கள். AP view, PA view எடுத்துப் பார்த்தால் doctor fracture ஏதும் இல்லை என உறுதிப்படுத்தினார்.
ஆனால் அப்போது வீக்கம் பெரிதாக இருந்தது. Crepe Bandage போட்டு விட்டார்கள்.
இப்படி bandage போட்டு விட்டால் வெந்நீர் ஒத்தடங்கள் எப்படி கொடுப்பது? இது சீக்கிரம் குணமாவதை கெடுத்து விடும் எனத் தோன்றியது.
Pain killer போட்டுக் கொள்ள கூடாது , அதற்கு மாற்றாக டாக்டர் ஏதாவது சொல்கிறாரா எனக் கேட்போம் என உறுதியாக இருந்தேன்.
Liver issues பற்றி சொன்னவுடன் Paracetamol வேண்டுமானால் போடுங்கள் என சொல்லி அனுப்பி விட்டார்கள்.
தப்பித்தேன்.
இப்போது Walking stick நடப்பதற்கு கண்டிப்பாக வேண்டும் என அதை வாங்கச் செல்ல என்னை பார்த்த மாத்திரத்தில் ₹2200 Walker எடுத்து காட்டினார்கள்.
என்னை பார்த்தாலே “கப்பல் வியாபாரி” யாகவே ஒரு கும்பல் எப்போதும் நினைத்துக் கொள்கிறது.
நான் வேலையில்லாமல் இருப்பது, பிச்சையெடுக்காமல் வருமானத்தை சமாளிப்பது எவனுக்கும் தெரிவதில்லை.
₹2200 Walker வேண்டாம், வடபழனி பாரதம் stores போய் Walking stick வாங்கிக் கொள்ளலாம் என அங்கே விரைந்தேன்.
₹460, ₹205, ₹205 என 3 walking stick வாங்கினேன்.
வீட்டிற்குள்ளும், வெளியிலும் Walking Stick வைத்து நடப்பதே வலது கால் பிசகாமல் பார்த்துக் கொள்கிறது.
இன்னும் 1 வாரத்திற்குள் நிறைய முறை வெந்நீர் ஒத்தடங்கள் கொடுத்து இந்த வாக்கிங் Stick ஐ விரைவில் தூர வைக்க வேண்டும்.
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.