இயக்குநர், கவிஞர் பிருந்தா சாரதி அவர்களுடனான சந்திப்பு

இயக்குநர், கவிஞர் பிருந்தா சாரதி அவர்களுடனான சந்திப்பு

இயக்குநர், கவிஞர் பிருந்தா சாரதி அவர்களுடனான சந்திப்பு

இன்று(11-Jan-2026) இயக்குநர், கவிஞர் பிருந்தா சாரதி அண்ணனுடன் நிறைய நேரம் பேச முடிந்தது.

நம்ம குழுக்களில் செம Active.

இவருடைய Patience and Listening capabilities நிறைய பேருக்கு கிடையாது.

பொறுமையாக நாம் பேசுவதை ஒரு டாக்டர் போல கேட்டு ஆலோசனைகளை கூறுவார்.

எனக்கு மிகச் சிறந்த ஆலோசனைகளை #வாசிப்புப்போட்டி2023 விழாவுக்கு தயாராகி கொண்டிருந்த நேரத்தில் வழங்கியவர்/இன்றும் வழங்குபவர்.

“வெட்கமறியாத ஆசைகள்” சிறுகதைத் தொகுப்பையும் , 2026 டைரியையும் கொடுக்க முடிந்தது.

அவர் போற போக்கில் எழுதும் வரிகள் கூட அழகு.

உதாரணத்திற்கு – “முக்கோண மனிதன்” முன்னுரையில்..

⭐”உடைந்த கண்ணாடியும் முழுமையான கண்ணாடி செய்யும் வேலையை முழுமையாக செய்யும்” ⭐

நான் காலேஜ் படிக்கும் போதே அவர் இயக்குநர்.

என்னிடம் இன்று கையெழுத்திட்டு கொடு எனக் கேட்டது அவரை இன்னும் பிடிக்கவே செய்தது.

இடது கையில் எழுதுவதை கவனித்தவர் “சஞ்சய் ராமசாமி”  என்று வேறு கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.

⭐”அன்பின் முன் மனிதன் சிற்றெறும்பு” ⭐

👆🏻 அவரிடமிருந்தே எடுத்தது .

என்னிடமிருக்கும் அவருடைய கவிதைத் தொகுப்புகள் – “மீன்கள் உறங்கும் குளம்” , “முக்கோண மனிதன்”

திடீரென எடுத்து…
Random ஆக அவர் கவிதைத் தொகுப்பை எடுத்து ஒரு பக்கத்தை திருப்பி படிப்பது வழக்கம். பைபிளும் இதே போல தான் படிக்கிறேன்.

இன்று பல விஷயங்கள் அவரிடம் மனம் விட்டு பேச முடிந்தது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

#DiscoveryBookPalace
#டிஸ்கவரிபுக்பேலஸ்
#brinthasarathy
#இயக்குநர்பிருந்தாசாரதி
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.