சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா…எதிர்த்து நின்னா எவனும் தூசுடா…

சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா…எதிர்த்து நின்னா எவனும் தூசுடா…

நேற்றைய(5-Jan-2026) நிகழ்வில் எழுத்தாளர், இயக்குநர் பாஸ்கர் சக்தி அண்ணா வை சந்தித்து பேசியது மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

அவரிடம் IT வேலைப்பளுவால் ‘ரயில்’ பார்க்க முடியவில்லை, இப்போது எப்படி பார்க்கலாம் என விசாரித்தறிந்தேன்.

‘ரப்பர் வளையல்கள்’ சிறுகதைத் தொகுப்பின் அணிந்துரை பாஸ்கர் சக்தி அண்ணா எழுத சம்மதித்து Oct 2020 இல் எழுதி கொடுத்தார்.

அதன் பிறகு பாஸ்கர் சக்தி “என் ஊர்க்காரர், என் ஊர்காரர்” என ஒவ்வொரு வரும் என்னிடம் வந்து சொன்னதை சொன்னதும் அவரும் சேர்ந்து சிரித்தார்.

1. இன்முகத்துடன் துளி கூட பந்தா இல்லாமல் யார் வந்து பேசினாலும் தனக்கு தெரிந்த விஷயங்களை அவர்களுக்கு பகிர்வது

2.மறைந்த தனது நண்பர் க.சீ.சிவகுமாரின் நினைவு நாளில் தவறாமல் அவரை நினைவு கூர்ந்து எழுதுவது, அவருடைய குடும்பத்திற்கு உதவுவது, 

3. எழுத்தாளர் ஞானி அவர்களை பற்றி அவரின் நினைவு நாட்களில் தவறாமல் எழுதுவது

4. தன் உயரத்தை சரியாக அறிந்து சில இடங்களில் எந்த வார்த்தையும் பேசாமல் ஒரு நக்கல் கலந்த புன்னகையுடன் நகர்ந்து விடுவது..

இப்படி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அவர்களிடம் எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய.

ஒரு Dudette army வேறு இருக்கும் போலயே…இது தெரியாம போச்சே….

பொன்சீ(பொன். சந்திரமோகன்) அண்ணா வருகை மனதிற்கு உற்சாகத்தை கொடுத்தது.

2020,2021 காலக்கட்டத்தில் புத்தக வடிவமைப்பை பற்றி அவரிடம் கேட்டு நிறைய அறிந்திருக்கிறேன்.

பொன்சீ அண்ணா புத்தகங்களை வடிவப்பமைதில் ஒரு SME.

‘பொன்சீ’ அண்ணா, சின்ன முதலாளி’ சஞ்சய், பாஸ்கர் சக்தி அண்ணா என சின்ன அரட்டையுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.

#DiscoveryBookPalace
#வாசிப்புப்போட்டி2022 #BookReleases
#Discoveryவேடியப்பன்
#Writer
#BaskarSakthi
#பாஸ்கர்சக்தி
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.