Discovery குகையில் மும்பை அம்பை – எழுத்தாளர் மஞ்சுநாத் அவர்களின் “அப்பன் திருவடி”  – நாவல் வெளியீட்டு விழா

Discovery குகையில் மும்பை அம்பை – எழுத்தாளர் மஞ்சுநாத் அவர்களின் “அப்பன் திருவடி”  – நாவல் வெளியீட்டு விழா

AGS க்கு ஃபோன் செய்து ஒரு நாவல் வெளியீட்டு விழாவிற்கு போறேன் வர்றீங்களா? என்றதும் உடனடியாக ஒத்துக் கொண்டார்.

நாங்கள் சந்தித்து 2 வருடங்கள் ஆகி விட்டது.

புத்தாண்டு அன்று நிறைய நேரம் பேசி விரைவில் சந்திக்கலாம் என திட்டமிட்டிருந்தோம்.

எழுத்தாளர் மஞ்சுநாத் அவர்கள் பாண்டிச்சேரியை சேர்ந்தவர்.

‘ரப்பர் வளையல்கள்’, ‘வெட்கமறியாத ஆசைகள்’ இரண்டு சிறுகதைத் தொகுப்பையும் முழுமையாக படித்தது மட்டுமின்றி

ஒவ்வொரு சிறுகதை பற்றிய தன் பார்வையையும் சிறப்பான வாசிப்பனுபவங்களையும் மஞ்சுநாத் 2020, 2021 இல் பதிவிட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மஞ்சுநாத்திற்காக கண்டிப்பாக செல்ல வேண்டும், டிஸ்கவரியிலேயே நடக்கிறது, தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

எழுத்தாளர் அம்பை வருவதை பார்த்தவுடன் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு செய்தேன்.

இன்னொரு பக்கம் Discovery இல் எனக்கு இருக்கும் Comfort மற்ற இடங்களில் இருக்காது.

காரணம் வேடியப்பன் அண்ணாவும், சஞ்சய் அண்ணாவும்.

2014, 2015 முதல் இன்று வரை பல எழுத்தாளர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர் கள் என பேச்சை கேட்டு, பக்குவப்பட்டு, ஒரு கட்டத்தில் என்னையும் எழுத்தாளனாக்கிய இடம்.

4,5 சிறுகதைகளின் தலைப்புகள் முதல் புத்தகத்திற்கு தலைப்பாக வைக்க குழும்பிக் கொண்டிருந்த போது வேடியப்பன் அண்ணா தேர்ந்தெடுத்த தலைப்பு ‘ரப்பர் வளையல்கள்’.

அதுவே முதல் சிறுகதைத்தொகுப்பின் தலைப்பாக  அமைந்தது.

எனக்கு டிஸ்கவரி மூலம் நன்கு அறிமுகமாயிருந்த எழுத்தாளர் பாஸ்கர் சக்தி அண்ணா கதைகளை படிக்காமலேயே எனக்கு அணிந்துரை எழுதித் தந்திருப்பார்.

நான் தான் Wanted ஆக போய் சிறுகதைகளை அவருக்கு அனுப்பி மாட்டிக்கொண்டேன்.

பாஸ்கர் சக்தி அவர்களின் அணிந்துரையில் சற்று விமர்சனம் கலந்து இருந்தாலும் அவர் எழுதியதில் ஒரு வார்த்தை கூட எடுத்துவிடாமல் அதை அப்படியே அச்சுக்கு அனுப்பினோம்.

எனது 19 சிறுகதைகளின் மேல் எனக்கு நம்பிக்கையிருந்தது. ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களங்களை, வெவ்வேறு வயதினரை பற்றி அவர்கள் வாழ்வில் நடப்பவையே கதைகளாக எழுதியிருந்தேன்.

இன்று(5-Jan-2026) 11 வருடங்களுக்கு பிறகு அந்த ஞாபகங்களுடன் டிஸ்கவரி சென்ற போது AGS கீழே காத்திருந்தார்.

மேலே முதல் தளத்தில்
எழுத்தாளர் மஞ்சுநாத்
எழுத்தாளர் அம்பை (மும்பையில் வசிக்கிறார்)
எழுத்தாளர் N Sriram,
எழுத்தாளர் சித்ரா சுப்ரமணியன்,
எழுத்தாளர் வெங்கட சுப்பிராய நாயக்கர்,
விமர்சகர் மந்திர மூர்த்தி அழகு

என நிகழ்வு சென்று கொண்டிருந்தது.

எடுத்து போயிருந்த Books and Readers Clock, Diaries வேடியப்பன் அண்ணாவிற்கு கொடுத்து விட்டு AGS ஓடு மேலே சென்றால் அங்கே எழுத்தாளர் வெங்கட சுப்பிராய நாயக்கர் அவர்கள் பேசி கொண்டிருந்தார்.

Suresh(Shruti TV) ஐ பார்த்ததும் எப்படியும் கேட்காமல் விட்ட பேச்சுகளை Shruti TV youtube channel இல் பார்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.

பாஸ்கர் சக்தி அண்ணாவுடன்
எழுத்தாளர் சவிதா,
எழுத்தாளர் Ahila Sridhar என‌ தெரிந்த முகங்கள்.

Suresh க்கு Diary கொடுத்து விட்டு கிழே AGS ஓடு போய் Black Coffee குடித்து விட்டு திரும்பி வர எழுத்தாளர் மஞ்சுநாத் பேச ஆரம்பித்திருந்தார்.

அதை Video எடுத்து விட்டு விழா முடிந்ததும் அனைவருக்கும் Sivashankar Jagadeesan foundation Diary களை கொடுத்தேன்.

எழுத்தாளர் வெங்கட சுப்பிராயர் தான் 40 வருடங்களாக டைரி எழுதுவதாக கூறினார்.

“அப்ப இந்த டைரி எப்படி இருக்குன்னு மார்க் போட சரியான நாள் நீங்க தான். Review பண்ணி சொல்லுங்க” எனச் சொல்ல

9/10 என்றார். பக்கத்தில் பாஸ்கர் சக்தி அண்ணா சிரிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு பாஸ்கர் சக்தி அண்ணாவோடு தனியாக சில நினைவுகளை பற்றிபேசும் போது இன்னும் பலமாக  சிரித்துக் கொண்டிருந்தார்.

என்னையும் பாஸ்கர் சக்தி யையும்….புத்தகக்காட்சியில் வந்த புகைப்படத்தை பார்த்த ஒருவன் என் நண்பன் பாபுவிடம்…

“இவர்கள் இருவரையும் பார்த்தால் ரஜினிகாந்த் – கார்த்திக் சுப்புராஜ்  Combination போல் உள்ளது ” என்று கூறியிருந்தான்.

எழுத்தாளர் அம்பை அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு “வெட்கமறியாத ஆசைகள் ” சிறுகதைத் தொகுப்பையும்,  நம் Books and Readers குழுவின் #வாசிப்புப்போட்டி2021 #வாசிப்புப்போட்டி2022
#வாசிப்புப்போட்டி2023 விழாக்கள் பற்றியும் கூறி ஆசிகள் வாங்கி புகைப்படம் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றால் பொன்சீ(பொன். சந்திரமோகன்) அண்ணா.

பொன்சீ அண்ணா புத்தகங்களை வடிவமைப்பதில் ஒரு expert.

அவரிடம் பேசி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு AGS ஓடு விடைபெற்று கிளம்பினேன்.

#டிஸ்கவரிவேடியப்பன்
#DiscoveryVediyappan
#DiscoveryBookPalace
#எழுத்தாளர்மஞ்சுநாத்
#WriterManjunath
#எழுத்தாளர்அம்பை
#WriterAmbai
#WriterNSriram
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.