எஸ்.ரா புத்தக வெளியீட்டு விழா – Christmas அன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்ன தொகுப்பாளர்

எஸ்.ரா புத்தக வெளியீட்டு விழா – Christmas அன்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் சொன்ன தொகுப்பாளர்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வாசகர்கள்.  அவர்களுடைய புத்தகங்கள் தகவல் களஞ்சியம் .

அவருடைய எழுத்தில் நீண்ட விவரிப்புகள் இருக்கும்.

எழுத்துலகில் நம் Favorite.

எஸ்.ரா அவர்கள் வருடம் முழுக்க தான் எழுதும் புத்தகங்களை Dec 25 – Christmas அன்று வெளியிடுவதை கொரோனாவுக்கு முன்பிருந்தே வழக்கமாக்கியிருந்தார்.

எஸ்.ரா பிறந்த நாள் விழாக்களுக்கும், Dec 25 Russian Cultural centre இல் நடக்கும் புத்தக வெளியீடுகளுக்கும் தவறாமல் செல்வது வழக்கமாகியிருந்தது.

நேற்றும்(25-Dec-2025) நிறைய வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்ததும் அதே எளிமையுடன் பேசினார்.

நேற்று வெளியான 5 புத்தகங்களில் – சாய்ந்தாடும் குதிரை(சிறுகதைத் தொகுப்பு) , குற்ற முகங்கள்(புனைவு) வாங்கிக் கொண்டு போய் அவரிடம் கையெழுத்து பெற்றேன்.

நிறைய புது முகங்கள்.

தொகுப்பாளர் – “தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள்” என ஆரம்பித்தார்..

என் மனதின் குரல்:
அடேய்… அட..டேய்..

அடேய்…அட.டேய்…

யார்றா நீ?

ஒரு மனுஷன் வருஷம் பூரா 5 புக் எழுதி Dec 25 அன்னிக்கு வெளியிட்டா

இப்படி ஒரு Second ல செதச்சுட்டியேடா….

தமிழ் புத்தாண்டுக்கு இன்னும் 4 மாசம் இருக்கு டா…

எஸ்.ரா மைண்ட் வாய்ஸ்:
உன்னை தொகுப்பாளரா போட்டதுக்கு…..உன்னால என்ன முடியுமோ…அதை பண்ணிட்ட…

வாங்கிய புத்தகங்களை படித்து விரிவாக எழுதுகிறேன்.

#எஸ்ராமகிருஷ்ணன்
#SRamakrishnan
#புத்தகவெளியீட்டுவிழா
#BookReleases
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.