இந்தியாவில் சாமியாராகி பணம் சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்?
1. காவியில் ஒன்று, நீலத்தில் ஒன்று, மஞ்சளில், பச்சையில் ஒன்று என நீளமாக 10 செட் அங்கிகள்/வேஷ்டிகள் வாங்கி வைத்து கொண்டு அதை மட்டுமே அணிய வேண்டும். உடைக்கேற்ற மணி மாலைகள் வாங்கி அதையும் Matching ஆக வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

2. நீளமாக தாடி வைக்க வேண்டும். அதை Trim செய்ய கூடாது.
3. தேடி வரும் பக்த கோடிகளுக்கு Inner engineering course, Outer ring road course, Special Yoga Mudhra course என எதிலாவது சேர சொல்லி பணம் வசூலிக்க வேண்டும்.
3. ஊதுபத்தி விற்பது, தேன், பழம், பூ, தேங்காய் எண்ணெய் விற்பது, பக்திப்பொருட்கள் விற்பது என ஒரு e-commerce site வைத்துக் கொண்டு வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு தனியாக ஒரு technical team வைத்திருக்க வேண்டும்.
4. இறைவனை எப்போதாவது குறிப்பிட வேண்டும். ஆனால் இறைவனை பற்றி அதிகம் பேசக்கூடாது. தன்னை பற்றியே அதிகம் பேச வேண்டும்.
5. தான் செய்த தியாகங்களையும், எளிமையாக Hummer car மட்டும் வைத்திருப்பதையும் இந்த நாட்டுக்காக தான் செய்ய போகும் தியாகங்களையும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
6. ஒரு PR team உருவாக்கிக் கொள்ள வேண்டும். அவர்கள் Media, Press meet, Legal issues அனைத்தையும் டீல் செய்யும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
7. அமைச்சர்களை, முதல்வர், பிரதமர் என தன்னுடைய ஆன்மிக கூட்டங்களுக்கு அழைக்க வேண்டும். அப்போது தான் இந்த உலகம் பிரதமர் இந்த சாமியாருக்கு என நம்ப ஆரம்பிக்கும்.
8. 12-15 வயதுள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கு மொட்டை அடித்து வெள்ளை உடை /காவி உடை கொடுத்து அவர்களை Brain wash செய்து விடுவது.
9. சிறுவர், சிறுமிகளை மயக்க நிலையிலேயே வைத்திருப்பது, அவர்களை தேடி வரும் பெற்றோர்களை உள்ளே விடாமல் அடித்து திருப்பி அனுப்பி விட வேண்டும்.
10. குவியும் பணத்தை வைத்து வெளிநாடுகளில் ஏக்கர் கணக்கில் நிலம் வாங்கி வைத்திருக்க வேண்டும். இங்கே எதிர்ப்பு அதிகமானால் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று அங்கே முறைகேடாக வாங்கிய நிலத்தில் புது ஆசிரமத்தை நிறுவி விட வேண்டும்.
11. எங்கு சென்றாலும் ஆத்ம நிலை, பரிசுத்த நிலை என ஆரம்பித்து அரசியல் பேச வேண்டும். தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டு மக்களுக்கு சந்தேகம் வராதபடி அதற்கொரு சிவனின்/விஷ்ணுவின் பெயர்களில் ஒன்றை வைத்து விட வேண்டும்.
12. எப்போதாவது இறைவனை(சிவபெருமானை/விஷ்ணுவை/கண்ணனை/ராமனை) பற்றி பேச வேண்டும்.
13. அரசியல் தலைவர்களுக்கு கற்றுக் கொடுத்ததே தான் தான் என்பது போல பேச வேண்டும். அப்போது தான் மக்கள் இந்த சாமியார் சொல்லி தான் பிரதமர் அதை செய்தார், இந்த சாமியார் சொல்லித் தான் Government ஏ நடப்பது போல் பேசுவார்கள்.
14. டான்ஸ் ஆட தெரிந்திருக்க வேண்டும். அரைகுறையாக.
#HowTo
#EliteCorporateGodmen
#CorporateSamiyaargal
#SivashankarJagadeesan
#என்னசெய்யவேண்டும்?
#கார்ப்பரேட்சாமியார்கள்
#சிவஷங்கர்ஜெகதீசன்
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.