படத்தொகுப்பாளர் B. லெனின் அவர்களுடனான சந்திப்பு

நேற்று முன் தினம் (18-Nov-2025) இரவு எழுத்தாளர், இயக்குநர், படத்தொகுப்பாளர் B. லெனின் அவர்களை சந்தித்து பேச முடிந்தது.

தன்னுடைய வாழ்வியல் அனுபவங்கள், பத்மராஜனுடனான தன்னுடைய நினைவுகள், எடிட்டிங் அனுபவங்கள் என மனிதர் ஒரு மணி நேரம் எனக்கு அவருடைய நினைவுகளையும் அனுபவங்களையும் பகிர்ந்தார்.

சமகால படங்கள் அவருக்கு ஏற்படுத்தும் அயர்ச்சியை யும், சில படங்களுக்கு சென்று பாதியிலேயே எழுந்து வந்து விட்டதையும் சொல்லி சிரித்தார்.

கலாரசனையுடையவர். சிறந்த இயக்குநர்கள் , படைப்பாளிகளுடன் இணைந்து 50 வருடங்கள் பணியாற்றியாருக்கிறார்.

இவருடைய “ஊருக்கு நூறு பேர்” திரைப்படம் 2001 இல் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.தனது தந்தை பீம்சிங் அவர்களுடைய புகைப்படத்தை மொபைலில் காட்டி அவர் எப்படி வாழ்க்கையை எடுத்துக் கொண்டார் என விவரித்தார்.

படத்தொகுப்பு முன்னர் Screenplay ஏன் சரியாக இருக்க வேண்டும்? , சில ஹாலிவுட் படங்கள் என சென்ற உரையாடலில் கொஞ்சம் கூட உற்சாகம் குறையவில்லை.

எனக்கு ஒரு 1-1 வகுப்பு எடுத்தார் என்றே சொல்ல வேண்டும்.பேசி முடித்து கிளம்பும் போது

என்னுடைய போரான நாளை சிறந்த நாளாக மாற்றியிருந்தார்.

#EditorBLenin

#படத்தொகுப்பாளர்

#லெனின்

#BLenin

#சிவஷங்கர்ஜெகதீசன்

#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.