கதைப்போமா வாங்க – மூன்றாம் நிகழ்வு மற்றும் தற்கொலை தாகங்கள் – கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

கதைப்போமா வாங்க – மூன்றாம் நிகழ்வு மற்றும் தற்கொலை தாகங்கள் – கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

கதைப்போமா வாங்க – மூன்றாம் நிகழ்வு மற்றும் தற்கொலை தாகங்கள் – கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா

நங்கை ஸ்வேதா ஏற்பாடு செய்த கதைப்போமா வாங்க மூன்றாம் நிகழ்வு நேற்று (29 ஜூன் 2024)  மாலை தரமணியில் உள்ள Spastic society அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவை ஸ்வேதா மிக அழகாக வடிவமைத்திருந்தார்.

முதலில்  மூன்று திருநங்கைகள் கவிதைகள் வாசித்தனர்.  அதன் பிறகு “கதைப்போமா வாங்க” நிகழ்வில் பேச ஆறு பேர் தயாராக இருந்தனர்.

Evangeline, Pavan, Bhavana, Arun Karthick, Sadhana, Akila, Pragati Sivan, தங்களுடைய வாழ்க்கையை பற்றி தான் பெண்ணாக/ஆணாக உணரத்தொடங்கிய தருணம் என ஒவ்வொருவராக விவரிக்க ஆரம்பித்தனர். Arun Karthick தான் ஆணாக உணர தொடங்கிய தருணம் மற்றும் திருநம்பியாக மாறியது எப்படி என்பதை பகிர்ந்தார்.

இதற்கடுத்து எழுத்தாளர்கள் லதா சரவணன், ஓவியர் ஷ்யாம் சங்கர், நடிகை Milla Babygal, கவிஞர், நடிகை ரேகா மற்றும் நானும் இணைந்து ஸ்வேதாவின் “தற்கொலை தாகங்கள்” கவிதைத் தொகுப்பை வெளியிட்டோம்.

பிறகு திருநங்கைகள் பற்றிய ஒரு அழகான MIME நாடகம் நடைபெற்றது.
பெங்களூரிலிருந்து வந்த நடனக் குழுவினர் திரைப்பாடல்களுக்கு ஐந்து நிமிடங்கள் சிறப்பாக நடனமாடினார்கள்.

விருந்தினர்களுக்கு, கதைப்போமா வாங்க நிகழ்வில் பங்கேற்ற ஆறு பேருக்கு என நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

நங்கை ஸ்வேதா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவர் திருநர் சமூகத்திற்காக பாடுபடுகிறார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அவர் தென்னிந்திய மாநிலங்களில் இருக்கும் திருநங்கைகளை ஒருங்கிணைக்கிறார். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழி செய்கிறார். தன்னைத் தேடி வரும் திருநர் சமூகத்திற்கு புதிய நம்பிக்கை அளிக்கிறார்.

ஸ்வேதாவின் பங்கு நம் சமூகத்திற்கு ரொம்ப தேவையானது,

அவசியமானதும் கூட.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் ரொம்பவே மகிழ்ச்சி. Thanks to Swetha.

#BornToWin
#கதைப்போமாவாங்க
#நங்கைசுவேதா
#NangaiSwetha
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.