







விண்வெளித் தழும்புகள் – நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு – தமிழாக்கம்: ஜே.வி – நாதன் புஸ்தகா வெளியீடு
இன்று(28-Jun-2024) நடந்த விண்வெளித் தழும்புகள் – நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு – நூல் வெளியீட்டு விழா – சிறப்பான ஆளுமைகளின் உரைகளுடன் அருமையான விழாவாக நடைப்பெற்றது.
Ready To Fire: How India and I Survived the ISRO Spy Case
Book by Arun Ram and Nambi Narayanan
புத்தகத்தின் தமிழாக்கமே விண்வெளித் தழும்புகள். ஜே.வி. நாதன் அவர்கள் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
விழாவில் மேடையில் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள், ஆட்சியர், முன்னாள் தலைமை செயளாளர் இறையன்பு IAS அவர்கள்,
குமுதம் முன்னாள் பொறுப்பாசிரியர் மாலன் அவர்கள், எழுத்தாளர் சிவசங்கரி, இயற்கை மருத்துவர் அப்துல் கவுசர், ஹரி கோபாலன், நூலை தமிழாக்கம் செய்த ஜே.வி. நாதன் அவர்கள், புஸ்தகா பதிப்பகம் ராஜேஷ் அவர்கள் என பெரும் ஆளுமைகளால் மேடை நிறைந்திருந்தது.
அரங்கத்தில் ஆடியன்ஸ் பகுதியில் அமர்ந்திருந்தவர்களிலேயே எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள், பதிப்பாளர்கள், கவிஞர்கள்,ஆழ்ந்த வாசிப்பாளர்கள் எனப் பலரை காண முடிந்தது.
எழுத்தாளர் லதா சரவணன் இந்த நிகழ்வை தொகுக்கவிருக்கிறார் என்றறிருந்தவுடன் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற ஆர்வம் மிகுதியானது. இப்படி ஒரு விருந்தினர் பட்டியலையும் வெளியிடப்படும் புத்தகத்தையும் பார்க்கும் போது இந்த நூல் வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்றே தோன்றியது.
நேற்று வெளியூர் சென்று காலை 4:30 மணிக்கு தான் திரும்பியிருந்தேன்.
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு காலை 10:30 க்குள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது நேரத்தை பொறுத்தவரை சவாலாக இருக்கும் என நினைத்திருந்தேன்.
அதே போல் சரியாக 10:30 மணிக்கு தான் செல்ல முடிந்தது.
அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடந்த நிகழ்வில் நிரம்பிய கூட்டத்தில் பலர் நின்று கொண்டே உரைகளை கேட்க ஆரம்பித்திருந்தார்கள். எழுத்தாளர் கணேஷ் பாலா அவர்கள், கவிஞர், நடிகை ரேகா சிவன், பொன்.காசிராஜன் அண்ணா, கவிஞர் சுபாஷினி ரமணன் மேடம், இயக்குநர் பிருந்தா சாரதி அவர்கள், எழுத்தாளர், பதிப்பாளர் குகன் கண்ணன், குமுதம் முன்னாள் பொறுப்பாசிரியர் மாலன் அவர்கள் , VSV ரமணன் அவர்கள், வேதா கோபாலன் அவர்கள் – இவர்கள் அனைவரையும் சந்தித்து பேச முடிந்தது.
எழுத்தாளர் லதா சரவணன் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நம்பி நாராயணன் அவர்கள் தனது உரையில் தனக்கு ஏற்பட்ட மன கசப்பான அனுபவங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் எனப்பேசினார்.
மற்ற விருந்தினர்கள் அனைவரையும் குறிப்பிட்டு தனக்கு அவர்களிடம் பிடித்தவை பற்றி பேசினார்.
எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் புத்தகத்தை முழுமையாக படித்திருக்கிறார். அது அவருடைய பேச்சிலேயே தெளிவாக தெரிந்தது.
குமுதம் இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர் மாலன் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்திய விஞ்ஞானிகளுக்கு வந்த அச்சுறுத்தல்கள், 1960- 1970 காலகட்டங்களில் நடந்த சூழ்ச்சிகள் என பொறுமையாக விளக்கினார்.
அடுத்து பேசிய ஆட்சியர், முன்னாள் தலைமை செயளாளர் வெ இறையன்பு IAS அவர்கள் வந்திருந்த அனைவரையும் 25 நிமிடங்களுக்கு தன் பேச்சாற்றலால் கட்டிப் போட்டார். அவருடைய சிறப்புரை அட்டகாசமாக நிகழ்ச்சியின் highlight ஆக அமைந்தது.
விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் மிகுந்த பொறுமையுடன் அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டு வந்திருந்த அனைவருடைய
“விண்வெளித் தழும்புகள்” பிரதிகளிலும் கையெழுத்திட்டு கொடுத்தார்.
#விண்வெளித்தழும்புகள்
#நூல்வெளியீட்டுவிழா
#நம்பிநாரயணன்
#NambiNarayanan
#இறையன்பு
#வெஇறையன்பு
#Iraianbu
#IraianbuIAS
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.
Very nice sir. Pl msg your whatsapp noRegardsHari hara subra மணியன்ராஜபாளையம்9443217206
Yahoo Mail: Search, Organize, Conquer
LikeLike