திருவாசகம் – திருக்கோத்தும்பி – பாடல் 4

திருவாசகம் – திருக்கோத்தும்பி – பாடல் 4

திருவாசகம் – திருக்கோத்தும்பி – பாடல் 4

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி

வண்ணப் பனித்தென்னை வாவென்ற வான்கருணை

சுன்னப்பொன் நீற்றற்க்கே சென்றூதாய் கோத்தும்பி

பதப்பொருள்:

ஏ அரச வண்டே! கண்ணப்பருக்கு ஒப்பான அன்பு என்னிடத்தில் இல்லாமை அறிந்தும்

என் தந்தை எதனோடும் ஒப்பில்லாத என்னையும் அடிமையாக ஆட்கொண்டருளி

யான் வணங்க வேண்டிய வகையை தெரிவித்து
என்னைத் தில்லைக்கு வருக என்று அருளிய

வான்கருணையையுடைய அழகிய திருநீற்றை யணிந்தவனிடத்தே சென்றூதுவாயாக.

#திருவாசகம்
#Thiruvasagam
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.