திருவாசகம் – திருகோத்தும்பி – 2

திருவாசகம் – திருகோத்தும்பி – 2

திருவாசகம் – திருகோத்தும்பி – 2

நாளார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யாரறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடை தலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பி

பதப்பொருள்:

ஏ அரச வண்டே! தேவர் பெருமான்
பேரருள் காரணமாக மனமிறங்கி என்னை ஆண்டருளாலிடில்
நான் என்ன தன்மையுடையவனாயிருப்பேன்
என் உள்ளம் என்ன தன்மையுடைய தாயிருக்கும்
என் அறிவு எத்தகையதாயிருக்கும்,
என்னைப் பற்றி யார் தெரிந்து கொள்ள போகிறார்கள்
மாமிசம் பொருந்திய உடைந்த தலை ஓட்டில்
உண்ணுதற்குரிய பிச்சையை ஏற்கின்ற
அம்பலவாணனது தேன் நிறைந்த தாமரை போன்ற
திருவடியின் கண்ணே சென்றூதாய் – சென்று ஊதுவாயாக.

#திருவாசகம்
#Thiruvasagam
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.