ஆயிஷா இரா நடராசன் – சிறப்பு விருந்தினர் – #வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023  பரிசளிப்பு விழா

ஆயிஷா இரா நடராசன் – சிறப்பு விருந்தினர் – #வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023  பரிசளிப்பு விழா

இன்று (27-ஏப்ரல்-2024) ஆசிரியர் செல்வராஜ் அவர்களுடன் கடலூர் சென்று எழுத்தாளர், கல்வியாளர், அறிவியல் புனைக்கதை ஆசிரியர் ஆயிஷா. இரா. நடராசன் அவர்களை சந்தித்தோம்.

சாகித்ய அகாதெமி விருது மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை விருது என பல விருதுகளை வென்ற எழுத்தாளர்.

நம் #வாசிப்புப்போட்டி2023 மற்றும் #filmreviews2023
பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார்.

2022 இல் ஆயிஷா சிறுகதை 2 லட்சம் பிரதிகள் விற்றிருந்த போது நடந்த நிகழ்வில் அவரை சந்தித்து நம் #வாசிப்புப்போட்டி2022 இல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு கேட்டிருந்தேன்.

இன்று மீண்டும் அவரை சந்தித்து பேசியதில் அவருடைய புத்தகங்கள், Digital தளங்களில் வாசிப்பு, சாகித்ய அகாதமி, சிறார் இலக்கியம் என நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

‘மனசே ரிசர்ச் ப்ளீஸ்’ என்ற அவருடைய புத்தகத்தை எனக்கும்

‘கழுதை வண்டி’ என்ற நாவலை  Selvaraj சாருக்கும் பரிசளித்தார். என்னுடைய ‘வெட்கமறியாத ஆசைகள்’ சிறுகதைத் தொகுப்பை அவருக்கு வழங்கினேன்.

Books & Readers – தமிழ்  , Films & Fans குழுவினரின் சார்பாக அவருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

#BooksAndReaders
#FilmsAndFans


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.