
மீண்டும் புறாக்கள் – பதிவு 2
நான்கு நாட்கள் குலதெய்வக்கோவில் சென்று திரும்புவதற்குள் புறா பெட்ரூம் ஜன்னலிலேயே கூடு கட்ட தொடங்கி விட்டது.
இப்போது முட்டையிட்டு அடை காத்து வருகிறது.
இதே போல் சென்ற வருடமும் செய்தது. சென்ற வருடம் சின்ன புறாக்கள் பறக்கும் வரை பொறுமையாக காத்திருந்து பிறகு வேறு வழியில்லாமல் கூட்டை கலைத்தேன்.
இப்போது புறாக்கூட்டை கலைக்க மனமில்லை. அதற்கு நம் முகம் நன்கு தெரிகிறது. பயமில்லாமல் மிக அருகிலேயே அமர்ந்திருக்கிறது.
இப்படி புறாக்கள் தேடித்தேடி வந்து கூடு கட்டுவது தொடர்கதையாகி வருகிறது. இதை எப்படி சமாளிப்பது எனப் புரியவில்லை.
ஆனால் புறாக்களின் வருகை நன்மையை அளிக்கிறது. . நல்ல விஷயங்கள் நடக்க போவதை அறிகுறிகளாக சொல்லாமல் சொல்கிறது.
#Pigeons
#புறாக்கள்
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.