முனைவர் சோம. வள்ளியப்பன் அவர்களின் 25 ஆண்டு கால எழுத்துலகப்பயணத்தை கொண்டாடும் நிகழ்வு
மிகச் சிறந்த மனிதர். பண்பாளர். இலக்கிய உலகில் எனக்கு மிகவும் பிடித்த மனிதர்.
நிதி மேலாண்மை, மனித வளம், சுய முன்னேற்றம் பற்றி இவர் எழுதிய புத்தகங்களை படிப்பவர்கள் சந்தேகமில்லாமல் ஆற்றல்மிக்க சிறந்த மனிதர்களாக, முதலீட்டாளர்களாக மாறி விடுவார்கள்.
முனைவர் சோம. வள்ளியப்பன் அவர்களின் 25 ஆண்டு கால எழுத்துலகப்பயணத்தை கொண்டாடும் நிகழ்வை கிழக்கு பதிப்பகம் 16-Apr-2024(சனிக்கிழமை) மாலை ஏற்பாடு செய்திருந்தது.
அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக எனக்கு அமைந்தது.
“ரப்பர் வளையல்கள்” சிறுகதைத் தொகுப்பையும் என்னையும் “The Hindu” நாளிதழின் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
பேசிய வாசகர்களின் பேச்சிலிருந்து “மேனேஜ்மென்ட் குரு கம்பன்” , “இட்லி யாக இருங்கள்” , “ஜெமினி சர்க்கிள்” சிறுகதைத் தொகுதி ஆகியவற்றை படிக்கும் ஆவல் தொற்றிக் கொண்டது. அந்த புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.
சிறப்பான நன்றியுரை ஆற்றினார்.
அவருடைய எழுத்துலக பயணத்தில் துணையாக இருந்த ஒவ்வொருவரையும் நினைவுகூர்ந்தார்.
சென்ற முறை அவர் சொந்த ஊரில் தேவக்கோட்டையில் இருந்ததால் #வாசிப்புப்போட்டி2021 இல் கலந்து கொள்ள முடியவில்லை.
#வாசிப்புப்போட்டி2023 பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இன்னும் நிதி மேலாண்மை, மனித வளம், சுய முன்னேற்றம் என சிறந்த நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் நீங்கள் எழுத வேண்டும். வணக்கங்கள் சார்.
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
#முனைவர்
#சோமவள்ளியப்பன்
#SomaValliyappan
#கிழக்குபதிப்பகம்

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.