சின்ன மனசுக்கு விளங்கவில்லையே நடந்நது என்னென்ன – அஞ்சலி பவதாரிணி
பவதாரிணி அவர்களின் இழப்பு இசை உலகிற்கு பேரிழப்பாகும். 2002ல் மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்காக தேசிய விருது பெற்றிருந்தார்.
தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, கன்னடா என மொத்தமாக பத்து படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
2002ல் நடிகை, இயக்குநர் ரேவதி அவர்கள் இயக்கி வெளியான மித்ர மை பிரண்டுக்கு(Mitr My Friend ) முதன்முதலாக இசையமைத்தார். 2019 இல் கடைசியாக இசையமைத்த படம் மாயநதி.
“மயில் போல பொண்ணு ஒன்னு” பாடல் படத்தில் சிறப்பான ஒரு தருணத்தில் சிறுவன் பாரதி கேட்கும் மெல்லிசை பாடல். இந்த பாடலில் அனைவரையும் ஈர்க்கும் விதமாக தன் வித்தியாசமான குழந்தைத்தனமான குரலில் பாடியிருந்தார்.
“ஆல்ப்ஸ் மலைக்காற்று” என்ற தேடினேன் வந்தது படத்தில் வரும் பாடலில் ஒரு அட்டகாசமான ஆலாபனை பாடலின் தொடக்கத்திலேயே வரும், மிகவும் சிறப்பாக பாடியிருந்தார்.
” ஒளியிலே தெரிவது தேவதையா” பாடல் சற்று மெனக்கட்டுப் பாட வேண்டிய பாடல். அதையும் சிறப்பாகவே பாடியிருப்பார்.
“காற்றில் வரும் கீதமே” பாடல் இசைஞானி – கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் அமைந்த அற்புதமான மெலோடி. அதில் இவரும் இவரது பங்கும் ரசிக்கத்தக்கதாகவே இருக்கும்.
“தவிக்கிறேன் தவிக்கிறேன்” – டைம் படத்தில் வந்த பாடல் இவருடைய குரலுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
“மஸ்தானா மஸ்தானா” – பாடல் இவருடைய குரலுக்கு பொருத்தமான மற்றொரு பாடல்.
பவதாரிணி அவர்கள் பாடிய பாடல்களின் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.
1. மயில் போல பொண்ணு ஒன்னு – பாரதி
2. ஒளியிலே தெரிவது தேவதையா – அழகி
3. இது சங்கீத திருநாளோ – காதலுக்கு மரியாதை
4. காற்றில் வரும் கீதமே – ஒரு நாள் ஒரு கனவு
5. தவிக்கிறேன் தவிக்கிறேன் – டைம்
6. மஸ்தானா மஸ்தானா – ராசய்யா
7. நதியோரம் வீசும் தென்றல் – அலெக்சாண்டர்
8. என் வீட்டு ஜன்னல் – ராமன் அப்துல்லா
9. ஆல்ப்ஸ் மலைக்காற்று – தேடினேன் வந்தது
10. தாலியே தேவையில்லை – தாமிரபரணி
11. ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி – அநேகன்
12. ஒரு சின்ன மணிக்குயிலு – சக்திவேல்
13. பூங்காற் பூங்காற்றே நீ என்னை தொடலாமா –
14. சந்தனம் தேச்சாச்சு என் மாமா – மாணிக்கம்
15. துடிக்கின்ற காதல் தும்மலை போன்றது – நேருக்கு நேர்
16. முத்தே முத்தம்மா – உல்லாசம்
17. உன்னை விட மாட்டேன் – இரட்டை ரோஜா
18. ஆலமரம் – செந்தூரம்
19. மெஹருசைலா – மாநாடு
20.பண்ணைபுரத்து – மாமனிதன்
பவதாரிணி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
#பவதாரிணி
#RIPBhavatharini
#இசைஞானிஇளையராஜா
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.