Anuradha Sriram Live in concert- TSK Divas‌

Anuradha Sriram Live in concert- TSK Divas‌

மோகனா அக்கா இந்த நிகழ்விற்கு அழைத்திருந்தார்.

வழக்கம் போல அண்ணா மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விழாவரங்கை அடைவதற்குள் மணி 6:30 ஆகியிருந்தது.

2500 பேர் அமரக்கூடிய Auditorium என அலைபேசியில் அக்கா கூறியிருந்தார்.
எதிர்பார்த்ததை விட மிக பிரமாண்டமான நிகழ்வு என்பது நிகழ்விடத்திற்கு சென்றதுமே புலப்பட்டது.

நிகழ்வின் Highlight ஆக அமைந்தது SPB tribute என Anuradha Sriram அவர்கள் பாடிய பாடல்களே.‌

1. “கம்பன் ஏமாந்தான்”,
2. “நிலாவே வா”,
3. “சுவாசமே” – சரணத்தில் எடுத்தார் – தெனாலி
4. “காதல் வந்து தீண்டும் போது”(அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி- டூயட்) சரணத்தில் எடுத்தார்..

இந்த 4 பாடல்களும் அனுராதா அவர்களுடைய குரலில் கேட்பதற்கு அவ்வளவு இனிமையாக இருந்தது.

கூட்டத்தையே தனியாளாக சிறிது நேரம் கட்டிப்போட்டிருந்தார்.

நிகழ்வு 7 மணிக்கு தொடங்கியது. முதல் பாடலாக Sridhar Sena பாட “இசையில் தொடங்குதம்மா” பாடலோடு ஆரம்பித்தது.

Singer Diwakar “சந்தோஷ கண்ணீரே” என்று உயிரே பட பாடலோடு தொடர்ந்தார்.

Priya Jerson னின் “கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு” அட்டகாசம். மேல் ஸ்வரங்களில் சுலபமாக Sustain செய்தார். செம 💞.

அனுராதா ஶ்ரீராம் படு உற்சாகமாக மேடையேறினார். 30 வருடங்கள் திரைத்துறையில் பாடகியாக கடந்திருப்பது, தொடர்ச்சியாக தனக்கு வந்த Super Hit பாடல்கள் என நிறைய விஷயங்களை பேச ஆரம்பித்தார்.

மின்சார கண்ணா படத்தில் வந்த “அன்பென்ற மழையிலே” பாடலுடன் ஆரம்பித்தார்.

எதிர்பார்த்ததை விட செம கூட்டம். வந்திருந்த பெண்கள் குத்து பாடல்களுக்கு டான்ஸ் ஆட தயாராக இருந்தனர்.

“ஒல்லிகுச்சி உடம்புக்காரி ” பாடலை அனுராதா அவர்கள் திவாகரோடு இணைந்து பாடினார்.

தேவயானி மேடைக்கு வந்து தனக்கு அனுராதா ஶ்ரீராம் பாடிய “நலம் நலமறிய ஆவல்”, “மல்லிகையே மல்லிகையே” பாடல்களின் நினைவுகளை பகிர்ந்தார். “மல்லிகையே மல்லிகையே” பாடலை சில வரிகள் பாடி முடித்தார்.

“ஒல்லிகுச்சி உடம்புக்காரி ” பாடலை அனுராதா அவர்கள் திவாகரோடு இணைந்து பாடினார்.

ஒரு தொகுப்பாளருக்கு சில நேரங்களில் துரிதமாக செயல்பட்டு நேர விரயத்தை தவிர்க்க வேண்டும் மற்றும் மேடையிலுள்ள விருந்தினர்களை சிறப்பாக கையாள தெரிந்திருக்க வேண்டும். பார்வதி ( Parvathy ) இவை அனைத்தையும் சிறப்பாக செய்தார்.

குறிப்பாக, தேவா அவர்கள் பாடி முடித்து அவசரமாக மேடையிலிருந்து இறங்க முயல துரிதமாக ஒரு சால்வையை கொடுத்து அனுராதா ஶ்ரீராமிற்கு மரியாதை செய்யும்படி செய்தார்.

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு, கரு கரு கருப்பாயி பாடல்களுக்கு அனுராதா ஶ்ரீராமுடன் மேடையில் ஏராளமானோர் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிக் கொண்டிருந்தனர். நிகழ்வு களை கட்ட தொடங்கியிருந்தது.

தேவா விடைபெற Srikanth deva official Entry கொடுத்தார்.
“கண்ணம்மா கண்ணம்மா” பாடலுக்கு அனுராதா அவர்களுடன் டான்ஸ் ஆடி மீண்டும் அரங்கத்திற்கு புத்துயிர் கொடுத்தார்.

ஒரு break எடுத்துக் கொண்டு Lime Mint Juice சாப்பிட்டு திரும்பி வர “கால் முளைத்த பூவே” – (Priya, Sridhar sena) பாடிக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு வந்த

6. மீனம்மா மீனம்மா – அனு, Sridhar Sena
7. தைய்யா தைய்யா – Diwakar , Ramya
8. காட்டு சிறுக்கி – அனுராதா
9. நிலவைக் கொண்டு வா – அனு , Sridhar sena
10. காவாலா – ப்ரியா ஜெர்சன்

பாடல்களும் சிறப்பாக ஒலித்தது.

குறிப்பாக, “காட்டுச்சிறுக்கி”(ராவணன்) பாடலில் வயலினில் ஒருவர்(மனோஜ்) பின்னியெடுத்தார். மனிதர் ஒரு நிமிடம் பல experimentation செய்து அசத்தினார்.

இறுதிப்பாடலான “அப்படி போடு” (கில்லி) பாடலுக்கு ஒரு ஊரே ஆட அனுராதா அவர்களுடன் ஆடிக் கொண்டிருந்தது.

கணவன்மார்களிடம் குழந்தைகளை கவனித்துக் கொள்ள விட்டுவிட்டு மனைவிகள் விரைவாக மேடையருகே வந்து உற்சாகமாக ஆடியது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.

சிறப்பான நிகழ்வை நடத்தி முடித்திருக்கும் TSK Divas குழுவினருக்கு வாழ்த்துகள்.

#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
#AnuradhaSriram
#அனுராதாஶ்ரீராம்
#AnuradhaSriramLiveInConcert
#tskdivas
#tskdivasandentertainments

Anuradha Sriram Live in concert- TSK Divas‌
Anuradha Sriram Live in concert- TSK Divas‌2

Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.