ஊட்டி குறும்பட திரைப்படவிழா 2023

ஊட்டி குறும்பட திரைப்படவிழா 2023

தவறாமல் கலந்து கொள்ளும் விழாக்களில் ஊட்டி குறும்பட திரைப்படவிழாவும் ஒன்று.

இந்த குறும்பட திரைப்படவிழாவிற்கு நான்காம் முறையும், ஊட்டிக்கு ஆறாம் முறையும் வந்திருக்கிறேன்.

இம்முறை குறும்படங்களை தவிர ஊட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இது வரை காணாத சில இடங்களை பார்க்கவும் முடிவெடுத்திருந்தேன்.

தெரிந்த முகங்கள்,புதியவர்களின் அறிமுகங்கள் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஊட்டி மற்றும் சுற்றியுள்ள இடங்களிலுள்ள மனிதர்கள் , அவர்களின் உணவுமுறை, பண்பாடு, வாழ்வியல் முறைகளை மேலும் அறிந்து கொள்ள முடிந்தது.


மாவட்ட ஆட்சியர் துவங்கி வைக்க #ஊட்டிகுறும்படதிரைப்படவிழா2023 ஒரு புறம் நேற்றிலிருந்து நடந்து வருகிறது.


Rajesh அவர்கள் ஊட்டியின் தட்பவெப்ப நிலைகள், எந்த மாதங்கள் விழாக்களுக்கு, சுற்றுலா வருபவர்களுக்கு உகந்தது என்பது பற்றியும் , Assembly Theatre வரலாறையும் மிக அழகாக விவரித்தார்.

யோகானந்த் இம்முறை முன்பை விட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஊட்டியை சேர்ந்த இவர் Editor, Photographer மற்றும் Youtuber.

மற்றொருபுறம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் Charring Cross க்கு அருகிலிருக்கும் இடத்திற்கு இன்று (2-Dec-2023) வருகை புரிவதால் காவல்துறை, திமுக இளைஞர் அணி என காலியாக இருந்த இடம் Traffic Jam ஆகியிருந்தது.

விக்னேஷ் பரமசிவம் இயக்கிய ” Opposite Poles” சிறப்பான வசனம், இயக்கம் அமைந்த குறும்படமாக இருந்தது. கதாப்பாத்திரங்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

உணவு இடைவேளைக்கு பிறகு ஊட்டியை சுற்றிப் பார்க்கும் எண்ணம் மேலோங்க அவலாஞ்சி (Avalanche) ரூட்டில் வரும் இடங்களை சுற்றிப் பார்க்க கிளம்பி விட்டேன்.

#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan #Day1 #Day2 #ஊட்டிகுறும்படதிரைப்படவிழா2023
#ஊட்டிகுறும்படதிரைப்படவிழா
#FilmFestVibes
#ootyshortfilmfestival2023
#ootyshorts #ootyshortfilmfestival #ootyshortfilmfestival2023 #osff2023 #ooty #shortfilmfestival #filmfestival


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.