தமிழக அரசின் Co-Op Mart கூட்டுறவு சந்தை App
சமீபத்தில் தக்காளி விலை ஏறிய போது கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி விலை கிலோ ரூ.60 க்கு விற்கப்படும் என கூறியிருந்தார்.
அவரருகே இருந்த பேனரில் கூட்டுறவுத்துறையின் Co-Op Mart App பற்றி இருந்தது.
7-July-2023 அன்று கூட்டுறவுத்துறையின் Co-Op Mart App அறிமுகப்படுத்தியிருந்தனர்.
Bigbasket, #SwiggyInstamart போன்ற செயலிகளுக்கு மாற்றாக இருக்கும், விலை குறைவாக காய்கறிகள் இருக்கிறதா என உடனே செயலியை பதிவிறக்கம் செய்து பார்த்தால் காய்கறி பழங்களெல்லாம் இல்லை.
உயிர் உரங்கள், உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் நீரில் கரையும் உரங்கள் என்றிருந்தது.
ஒரு மாதத்திற்கு பிறகு செயலியில் மசாலா பொருட்கள், பருப்பு வகைகள், எண்ணெய், பூஜைப் பொருட்கள், சோப் என புதிய பொருட்களை சேர்த்திருந்தினர்.
குறைந்த விலையில் ஏதாவது இருக்கிறதா எனத் தேடி
- பசுமை தேங்காய் எண்ணெய் 1 கிலோ – ₹199
- பாதாம் பருப்பு 50 கிராம் ₹36
- உலர் திராட்சை. 100 கிராம் ₹19
ஆர்டர் செய்தேன். நேற்றிரவு delivery செய்தனர். Packing அருமை. தேங்காய் எண்ணெயின் தரம் மற்ற பொருட்களின் தரம் நன்றாகவே இருந்தது.
எல்லா பொருட்களும் குறைவான விலையில் இல்லை. குறைந்த விலையில் இந்த செயலியில் இருக்கும் மற்ற பொருட்கள்..
- புளி 500 g ₹ 53
- வெல்லம் 500 g ₹36
- கடுகு 100 g. ₹10
- வெந்தயம் 100 g. ₹12
- உளுந்து 1 கிலோ. ₹127
- முந்திரி 100 g. ₹ 65
- பட்டாணி 200g. ₹29
- பொட்டுக்கடலை 500g ₹50
பதிவிறக்கம் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.
தமிழகஅரசு
CoOpMart
கூட்டுறவுசந்தை
SivashankarJagadeesan
சிவஷங்கர்ஜெகதீசன்

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.