90’s Computer Lab பரிதாபங்கள் – மிரட்டி வெச்சிருந்தாங்க…



90’s Computer Lab பரிதாபங்கள் – மிரட்டி வெச்சிருந்தாங்க…

இன்று Instragram இல் Computer lab அனுபவங்கள் பற்றி ஒரு இளைஞர் பேசியதை ரசித்தேன். அவர் சொன்ன அத்தனை விஷயங்களும் 90களில் தனியார் பள்ளிகளில் Computer Lab இல் இருந்தது.

1992-1994- பெரிய CPU மற்றும் மானிட்டர்கள் தரைவிரிப்பு மற்றும் பராமரிக்க ஏசி:

92,93, 94 காலகட்டங்களில் கம்ப்யூட்டர்களை தனியார் பள்ளிகள் வாங்க ஆரம்பித்து அவற்றிற்குக்கென தனியாக குளிர்சாதன வசதியுடன் கூடிய சுத்தமான அறை, தரை முழுவதும் MAT போர்த்தப்பட்டு என Royal Lab ஆகவே Computer Lab இருக்கும்.

ஒரு கோவில் போல தூய்மை பணியாளர்களை வைத்து சுத்தமாக பராமரித்து வைத்திருப்பார்கள்.

“உலகநாயகன்” கமல்ஹாசன் அவர்களின் “மைக்கேல் மதன காம ராஜன்” படத்தில் Mini Computer ஐ காரில் மடியில் வைத்துக் கொண்டு கணக்கு பார்ப்பது போல் ஒரு காட்சி இருக்கும். அந்த மினி கம்ப்யூட்டர் ₹50000 இருக்கும் என பேசிக் கொண்டார்கள்.

Desktop கம்யூட்டர் மற்றும் CPU க்கள் அன்றைய விலைவாசிக்கு ₹70, 000 – ₹1,00,000 வரை இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் கம்யூட்டர் டீச்சர்கள் எப்போதும் ஒரு வித பதட்டத்துடனே இருப்பார்கள்..ஏதாவது ரிப்பேர் அல்லது ஆன் ஆகவில்லையென்றால் இவர்கள் Principal, Correspondent என பதில் சொல்ல வேண்டியிருக்கும். கம்யூட்டர் மற்றும் CPU க்களை பற்றி டீச்சருக்கும் ஓரளவு தான் தெரிந்திருக்கும்.

யாராவது CPU மற்றும் Monitor ஐ இணைக்கும் Bus(Wire கள்) களை பிடிங்கி விட்டால் இவர்களுக்கு இணைக்கக் கூட தெரிந்திருக்காது.

முதலில் கம்யூட்டர் லேப் வெளியே லைனில் நின்று ஷூக்களை கழற்றி Rack இல் வைக்க வேண்டும். Sacks களின் துர்நாற்றம் இங்கிருந்தே நம்மை பிடுங்கித் திண்ணும்.

உள்ளே ஏசி ரூமில் ஜில்லென்ற காற்று நம்மை வரவேற்றாலும் சாக்ஸ் துர்நாற்றம், கண்டு கொள்ளாத கடுகடு கம்யூட்டர் டீச்சர் என நம் ஆர்வத்தை குறைத்து விடும்.

அதையும் தாண்டி கம்ப்யூட்டரை தப்பித்தவறி ஆன் செய்தால்….

“அதை ஏன் ON செஞ்சே? அது இப்ப தான் Assemble பண்ணி வெச்சுருக்கோம். ஏதாவது Work ஆகலைன்னா Term fees ல அந்த Cost ஐயும் Add செஞ்சுடுவோம்” என மிரட்டுவார்கள்.


ஆறாம் வகுப்பு, 7,8,9, வகுப்புகளை சேர்ந்தவர்களை கம்ப்யூட்டர் டீச்சர்கள் மதிக்கவே மாட்டார்கள்…சிஸ்டத்தை தொட விடவே மாட்டார்கள்.

வரைந்த Computer flow chat ஐ காட்டி பாடம் எடுத்து 40 நிமிடம் ஓட்டி விட்டு அனுப்பி விடுவார்கள்.

1993-94

கடலூரில் பாபா பள்ளியில் படிக்கும் ஒரு கலாச்சார நிகழ்வு கம்ப்யூட்டர் லேப் அருகிலேயே இருக்கும் பள்ளியில் உள்ள பெரிய ஹாலில் நடக்கிறது.

அந்த கலாச்சார நிகழ்வில் நாடகத்தில் நடிப்பவர்கள், பாடுபவர்கள் கம்யூட்டர் லேபில் உட்காரவைக்கப் படுகிறோம். அப்போது எங்களில் சிலர் OFF நிலையில் உள்ள கம்யூட்டர் கீ-போர்ட் இல் கை வைப்பது, மேசையில் தாளம் போடுவது என உற்சாகமாக பாடிக்கொண்டிருந்தோம். இதை லேப் உதவியாளர்கள் பார்த்து Principal இடம் போட்டுக் கொடுத்து விட்டனர்.

விழா முடிந்ததும் நாங்கள் (15 பேர்) வரவழைக்கப்பட்டு கம்ப்யூட்டர் எங்களால் Repair ஆகி விட்டது என்றும், எங்களுக்கு fine போடுவதாகவும் அந்த Principal ஒரு மணி நேரம் மிரட்டினார். பிறகு ஒரு வழியாக அனுப்பி வைத்தார்.

1995-1997

இந்த காலக்கட்டத்தில் CPU க்கள் Size சின்னதாகி இருந்தது. வேகம் கூடியிருந்தது. Windows -95 இன் செவ்வக Logo .. கம்ப்யூட்டர் லேபில் எங்களை வரவேற்கும்.

சாக்ஸ் துர்நாற்றம் தொடர்ந்தது. MS-DOS, MS-BASIC program களை , command களை computer இல் அடித்துப் பார்க்க மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. MS-word , Foxpro என்றார்கள். அதை பார்க்க மட்டுமே முடிந்தது.

Ms-Paint, Solitaire(Cards Game) இல் கொஞ்ச நேரம் பொழுது போக்கிவிட்டு வருவது தான் computer period என்று இருந்தது.

For I = 1 to ∞
{
ஒரு முறை for loop program execute செய்யும் போது Infinity கொடுத்து விட்டு Run செய்ய அது Result ஐ இடைவிடாமல் ஓடச் செய்து விட்டது.
எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க…அந்த ஏசியிலும் பயங்கர வியர்வை.

அன்று டீச்சரிடம் செம டோஸ் வாங்கினேன்.

}
“Result நிக்காம ஓடிச்சுன்னா அதுக்கு நான் என்ன பண்றது?”

“ஒரு Program அ நிறுத்த தெரியாத நீயெல்லாம் எப்படி டீச்சரானே?” என்று கேட்கத் தோன்றியது.

அமைதியாக நின்றேன்.

பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் (196) பெற்று கல்லூரியில் Computer Engg எடுத்திருந்தேன்.

1999-2002 – Desktop Shortcut Icon

இந்த காலக்கட்டத்தில் பல வீடுகளிலும் கம்ப்யூட்டர் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். CD-Writer உடன் வாங்கி CDக்களில் இருந்த டேட்டாவை மற்றொரு CD யில் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு வீடுகள் இருந்தன.

Dell, HP, Zenith போன்ற கம்பெனிகளின் கம்ப்யூட்டர்களை Specifications பார்த்து வாங்கிக் கொள்ளலாம் அல்லது Assemble செய்த computer ஐ நம் விருப்பமான Specifications இல் வாங்கிக் கொள்ளலாம்.

Floppy Disk to CD, CD to DVD என வீடுகளில் மாறியிருந்தாலும் பள்ளி, கல்லூரி கம்ப்யூட்டர் லேப் களில் அப்படியே Windows -95 கம்ப்யூட்டருடனேயே பயணித்தார்கள்.

விஷயம் தெரியாதவர்களே Lab Assistant ஆக இருந்தார்கள்.

பாரத் Engg College இல் படிக்கும் போது புதிதாக underground இல் நவீன வசதிகளுடன் Computer Lab ஆரம்பித்திருந்தனர்.

ஒரு முறை Windows -2000 யில் Desktop shortcut icons ஒரு இடத்திலிருந்து Drag செய்து இன்னோரு இடத்தில் வைத்து விட்டேன்.

“இந்த மாதிரியெல்லாம் மாத்தி வெச்சா System repair ஆயிடும். போகும் போது அதே இடத்தில் அத வெச்சுரு”

என Lab Assistant சீரியசாக lecture அடித்தார்.

நானும் என் நண்பர்களும் லேப் வெளியே வந்து விழுந்து விழுந்து சிரித்தோம்.

#SivashankarJagadeesan #சிவஷங்கர்ஜெகதீசன்
#ComputerLab90s #ComputerLab


90’s Computer Lab பரிதாபங்கள் – மிரட்டி வெச்சிருந்தாங்க…


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.