வித்யா – சாதனை ஆட்டோ ஓட்டுநர் – Botanical Garden – Ooty

வித்யா – சாதனை ஆட்டோ ஓட்டுநர் – Botanical Garden – Ooty

இரண்டாம் முறை வித்யாவின் ஆட்டோவில் ஊட்டியை சுற்றுகிறேன்.

சென்ற முறை 2018 இல் வந்த போதும் அன்புடன் வரவேற்று சுற்றிக் காண்பித்தார்.

பல சவால்களை கடந்து வித்யா கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊட்டியில் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவர் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த போது பெண்களுக்கு ஆட்டோ ஓட்ட அனுமதியில்லை என ஆட்டோ யூனியன்கள் மற்றும் சங்கங்களே இவர் ஆட்டோ ஓட்டக் கூடாது என தடுத்திருக்கிறார்கள்.

பல வருடங்களாக போராடி பல Threats, சவால்கள், சோதனைகளை தாண்டி வெற்றிகரமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இப்போது இவரைப் பார்த்து 10க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்டோ ஓட்டுநராகியிருக்கிறார்கள்‌. இவர்களுக்கு வழிகாட்டியாக வித்யா.

வித்யாவின் பக்கபலமாக அவரது கணவர் ஸ்டான்லி மற்றும் மகள்.

SRVS School Excellence in Business Leadership Awards விருதுகளில் இந்த வருடம் சாதனை ஓட்டுநர் வித்யாவிற்கு விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.

அப்துல் கலாம் Foundation சார்பில் நடக்கும் விழாவில் வரும் திங்களன்று மற்றுமொரு விருது பெற இருக்கிறார்.

#VidyaOotyAuto #Ooty #Auto #BotanicalGarden #SivashankarJagadeesan #சிவஷங்கர்ஜெகதீசன்

வித்யா – சாதனை ஆட்டோ ஓட்டுநர் – Botanical Garden – Ooty


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.