இணையத்தில் ஒரு forwarded message

இணையத்தில் ஒரு forwarded message

இணையத்தில் ஒரு forwarded message
இறப்பதே இல்லை.

2002 இல் Yahoo mail, Yahoo messenger இல் ஆரம்பித்த forwarded message கள் 2022 லும் Facebook, WhatsApp, Telegram என்று சுற்றிக் கொண்டே இருக்கிறது.

உதாரணமாக ஒரு Cancer Patient க்கு Platelets level கம்மியாக உள்ளது,ரத்தம் தேவைப்படுகிறது இந்த hospital க்கு வந்து ரத்தம் கொடுங்கள் என்று hospital , Patient பெயர் போட்டு மெசேஜ் வரும்.

அந்த patient சில மாதங்களில் முற்றிலும் குணமாகியிருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம்; ஆனால் அந்த மெசேஜ் பல வருடங்களாக forward ஆகிக் கொண்டே இருக்கும், யாரோ ஒருவர் அந்த hospital க்கு வருடங்களுக்கு பிறகும் சென்று ரத்தம் கொடுக்க வந்திருப்பதாக சொல்லிக் கொண்டிருப்பார்.

உதாரணம் 2:

11:11 மணிக்கு இந்த மெசேஜை 11 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு நல்ல செய்தியும் 11 கோடியும் கிடைக்கும்.

இல்லையெனில் அடுத்த 11 வருடத்திற்கு துரதிர்ஷ்டம் தான்…

தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்

அல்லது

If you are a good soul , please share

என்றெல்லாம் போட்டு மெசேஜ் வரும்.

பல சமயங்களில் நமது சொந்தங்களிலேயே இணையம் பற்றி தெரியாத ஒரு பெரியவரோ , நண்பரோ நமக்கு இது மாதிரியான forwarded மெசேஜ் களை அனுப்பிக் கொண்டேயிருப்பார்கள்.

கடைசி வரியாக “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்” என்று போடுவது, “If you are a good soul” என்று போடுவது நம் மனசாட்சியை தூண்டிப் பார்த்து மற்றவர்களுக்கு அனுப்ப வைக்கவே.

இந்த forwarded மெசேஜ் களில் இருக்கும் நம்பர்களை வைத்திருப்பவர்கள் ஃபோன் செய்பவர்களுக்கு பதில் சொல்லியே அலுத்துப் போய் ஒரு கட்டத்தில் நம்பரையே மாற்றி விடுவார்கள்.

இந்த forwarded message களால் ஒருவருக்கு நடக்கும் விளைவுகளை நகைச்சுவையாக சொல்வதே இந்த “தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்” குறும்படம்.

4 வருடங்களுக்கு முன்பு எழுதிய கதை. “ரப்பர் வளையல்கள்” சிறுகதைத் தொகுப்பில் 9 வது கதை.

இந்த குறும்படத்தின் first look மற்றும் second look நாளை மாலை 4 மணிக்கு வெளியிடுகிறோம்.

#தமிழனாகஇருந்தால்ஷேர்செய்யவும்
#குறும்படம் #சிவஷங்கர்ஜெகதீசன்

#TamizhanaagaIrundhaalShareSeiyyavum
#ShortFilm #SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.