கவிஞர் வெய்யிலின் படைப்புலகம் – எஸ்.ராமகிருஷ்ணன் – குற்றத்தின் நறுமணம் – பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி
கவிஞர் வெய்யிலின் “பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி” வெளியாகிய போது இந்த கவிதைத் தொகுப்பை கட்டாயம் வாங்கி வாசிக்க வேண்டும் எனத் தோன்றியது. ஏனோ அவரை புத்தக காட்சிகளில் சந்தித்து பேசுவதோடு என் நட்பு இருந்தது.
இன்றைய நிகழ்வில் சற்று தாமதமாக சென்றாலும் ராஜகோபாலன் “குற்றத்தின் நறுமணம்” பற்றி பேசியதையும் எழுத்தாளுமை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் “அக்காளின் எலும்புகள்”, “குற்றத்தின் நறுமணம்” , “பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி” பற்றியும் விரிவாக வெய்யிலின் படைப்புலகத்தை பேசியதை கேட்க முடிந்தது.
கைகள் பற்றியும், கவிதையை நடனத்துடன் ஒப்பிடுவது புனைவெழுத்துகளை நடையுடன் ஒப்பிடுவது, தான் ஒரு பாடல் கவிஞராக “இசைஞானி” இளையராஜா அவர்களுக்கு எழுதப் ப்ரியப்பட்டது, எழுதிய அந்த பாடல் வெளிவராமலே போனது, ஒவ்வொரு முறை கவிதை எழுத நினைக்கும் போதும் கவிஞர் தேவதச்சன் போன்றோர் நினைவில் வருவதால் தொடராமல் விட்டு விடுவது என எஸ்.ரா அவர்களின் 90 நிமிட பேச்சில் வழக்கம் போல் detail அதிகம். அரங்கத்தையே பேச்சில் கட்டிப்போட்டார் என்றே சொல்ல வேண்டும்.
கவிஞர் வெய்யிலின் கவிதைகளை கவிஞர் காளமேகம் கவிதைகளை படிப்பது போல் இருப்பதாக ஒப்பிட்டார்.
எழுத்தாளர், இயக்குநர் லக்ஷ்மி சரவணகுமார், எழுத்தாளர் நக்கீரன், எழுத்தாளர் ராஜகோபாலன், கவிஞர் வெய்யில் மற்றும் எஸ்.ரா, விழா ஒருங்கிணைப்பாளர் அகரமுதல்வன், தம்பி தோழர் சரத், மாணவர் தாளமுத்து என பலரை சந்தித்து பேச முடிந்தது. என்னுடைய
“வெட்கமறியாத ஆசைகள்” சிறுகதைத் தொகுப்பை அனைவருக்கும் வழங்கியதில் மிக்க மகிழ்ச்சி.
“We can Books” குகன் ஸ்டாலிலிருந்து “இச்சிகோ இச்சியே” – (ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செக் மிராயியஸ்) எடுத்துக் கொண்டேன்.
தோழர். பரிசல் சிவ செந்தில்நாதன் அவர்களை சந்தித்து பேசி அவருடைய ஸ்டாலிலிருந்து
2. பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி – கவிஞர் வெய்யில்
3. குற்றத்தின் நறுமணம் – கவிஞர் வெய்யில்
இனிமையான ஞாயிறாக அமைந்திருந்தது. விழாவை ஒருங்கிணைத்த அகரமுதல்வனுக்கு பாராட்டுகள்.





