ஏகலைவன் – இயக்குநர் அருண் பகத் – கட்டை விரல் – கிரிக்கெட் அரசியல் – Cricket clubs

ஏகலைவன் – இயக்குநர் அருண் பகத் – கட்டை விரல் – கிரிக்கெட் அரசியல் – Cricket clubs

ஏகலைவன் – இயக்குநர் அருண் பகத் – கட்டை விரல் – கிரிக்கெட் அரசியல் – Cricket clubs

இன்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி கொண்டிருப்பவர்கள் ஒரு 8 மாநிலங்களிலிருந்து மட்டுமே இருப்பார்கள்.

அவை டெல்லி, Maharashtra, West Bengal, Tamilnadu, Gujarat, Punjab, உ.பி மற்றும் மாநகர அணிகள் தனியாக இருக்கும் மும்பை, Baroda மற்றும் Hyderabad.

இதைத் தாண்டி மற்ற மாநிலங்களான கேரளா, புதுச்சேரி, மத்திய பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து ஒருவர் கூட இந்திய கிரிக்கெட் அணியில் நுழைந்து விட முடியாது.

இதில் தோனி, சஞ்சு சாம்சன், Sreesanth போன்ற ஒரு சிலர் விதிவிலக்கு.

1995, 2000 காலங்களில் உத்திரபிரதேசத்தில் கான்பூரை மையமாக கிரிக்கெட் மாநில அணிக்காக விளையாடியவர்களில் 3-4 பேர் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களில் ஒருவரின் வாழ்க்கையை பற்றி எழுதிய சிறுகதைகதை தான் “நிராசை”. அது “வெட்கமறியாத ஆசைகள்” சிறுகதைத் தொகுப்பில் இருக்கிறது.

அதே போல் ஊர் மைதானங்களில், தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் எளிதாக cricket club களுக்கோ அல்லது அந்த ground களிலோ கிரிக்கெட் விளையாடிட முடியாது.

இந்தியாவின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் cricket club கள், cosmopolitan ground கள் என கிரிக்கெட் பயிற்சிகள் மேற்க்கொள்கிறார்கள். அவற்றில் ஒரு சாரார் மட்டுமே இணைக்கப்படுகிறார்கள்.

ஒரு குப்பத்துத் தெருவில் விளையாடும் ஒரு கிரிக்கெட் டீமின் நண்பர்கள் தெருவிலுள்ளவர்கள் தங்களை தொந்தரவாக பார்ப்பதால் ஒரு cricket club ground க்கு குழுவினரோடு சென்று விளையாட முயற்சிப்பதும்… அவர்களுக்கு முதலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு பிறகு Club vs Kuppam என மேட்ச் ஆடி அதில் அன்பு எனும் நாயகன் சிறப்பாக பந்து வீசி மாவட்ட பயிற்சியாளரின் கவனத்தை பெற்று விடுகிறான்.


இது பொறுக்காத Club cricket bowler சர்ஜூன் தன்னுடைய பயிற்சியாளரை அழைத்து தன் கோபத்தையும், பொறாமையையும் கொட்டி பயிற்சியாளரையே ஒரு கட்டத்தில் “துரோகி” என்கிறான்.

அடுத்து நடைபெறும் மாவட்ட கிரிக்கெட் செலக்ஷனுக்கு நீங்களே அன்பை தேர்ந்தெடுத்து கொடுக்க வாய்ப்பு அமைத்து விட்டீர்கள் என வசைபாடுகிறான்.

அந்த பயிற்சியாளருக்கு தன் சிறந்த மாணவனையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலை, தன் பயிற்சியை வெளியிலிருந்து கவனித்து திறமையை நிருபித்திருக்கும் அன்பையும் விட்டுக் கொடுக்க முடியாத நிலை.

அவர் இந்நிலையில் அன்பை அழைக்கிறார். வெள்ளந்தியாக செல்லும் அன்புக்கு என்ன நடந்தது. சர்ஜூன் சூழ்ச்சி வென்றதா என்பதை மிக அழகாக படமாக்கியிருக்கிறார் தோழர், இயக்குநர் அருண் பகத்.

வர்ண, வர்க்க அதிகாரத்தை மிக அழகாக கதையில் சொல்லியிருக்கிறார். மேடம்பாக்கம் கூட் ரோடு அருகிலுள்ள காயிதே மில்லத் காலேஜ் கிரவுண்டில் பெரும்பாலான காட்சிகளை வெகு இயல்பாக படமாக்கியிருக்கிறார்கள்.

நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பான பங்களித்துள்ளனர்.

சிறந்த படங்களை தர வேண்டும். மென்மேலும் வளர வாழ்த்துகள் அருண்.


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.