சிந்தனை விருந்தகம் – களம் வெளியீடு – சரவணன் தங்கப்பா – #வாசிப்புப்போட்டி2021
நம் #வாசிப்புப்போட்டி2021 இல் இரண்டாம் பரிசு , 10 பேருக்கு தர வேண்டிய ₹10,000 மதிப்பிலான புத்தகங்களை(10 பேருக்கு ₹1000 மதிப்பிலான புத்தகங்கள்) “சிந்தனை விருந்தகம்” சரவணன் தங்கப்பா அவர்கள் வழங்க சம்மதித்திருக்கிறார்கள்.
சென்னையில் ஒரு புத்தக கடை அதுவும் அண்ணா சாலையில் அமைக்க வேண்டும் என குறிக்கோள் வைத்து அதே போல் சென்ற வருடம் “சிந்தனை விருந்தகம்” ஆரம்பித்திருக்கிறார். சிறந்த தமிழ் இலக்கிய புத்தகங்கள் அனைத்தையும் ஆர்வத்துடன் வாங்கி சிறப்பாக நடத்தி வருகிறார்.
2021 ஜனவரியில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 2ம் ஆண்டில் பயணிக்கிறது. தமிழ்மொழி,இனம், சார்ந்த தமிழ்தேசிய கண்ணோட்டத்தில் பதிப்பு மற்றும் விற்பனைத் துறையில் சிந்தனை விருந்தகம் தனது பணியை தொடர்கிறது.
உலகெங்கும் பரவி இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் புத்தகங்கள் சென்றடையும் படி சிறப்பாக நடத்தி வருகிறார்.
நம் #வாசிப்புப்போட்டி2021 வெற்றியாளர்களுக்கு புத்தகங்கள் பரிசளிக்க முன் வந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் சரவணன்.

Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.