யோவ்… மிலிட்டரி நீ எங்கய்யா இங்கே!!!


யோவ்… மிலிட்டரி நீ எங்கய்யா இங்கே?

நேற்று மாலை Anti Indian சிறப்புக் காட்சிக்கு AG Sivakumar அழைத்திருந்தார். அண்ணன் ப்ளு சட்டை மாறனுடனும் குழுவோடு வந்து படம் பார்க்கிறேன் என சொல்லியிருந்தேன். 6:30 மணி காட்சிக்கு 5:30 மணிக்கு தான் கிளம்பினேன்.

வழக்கம் போல ஆர்காட் ரோட்டில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன்.

இந்த குளிர் காலத்தில் நிறைய தண்ணீர் குடித்து வருகிறேன், அதற்கேற்றாற் போல் அடிக்கடி Rest Room போக வேண்டியிருந்தது.

அவசர அவசரமாக கிளம்பியதுமில்லாமல் போக்குவரத்து நெரிசலில் AGS மறுபடி அழைத்து அங்கே எல்லோரும் வந்து விட்டார்கள் “சீக்கிரம் வாங்க, இல்லைன்னா இடமிருக்காது” என துரிதப்படுத்தினார்.

இரண்டு விஐபிக்கள் பேரை ஃபோனில் சொல்லியிருந்தார்.

நாம் நின்று படம் பார்க்கும் நிலை கொடுமை என அவசர அவசரமாக Uber இல் சென்றேன்.

சரியாக 6:30 மணிக்கு சென்று விட்டேன். அங்கே செந்தில்(ஆரூர் மூனா), செல்வின், கமலபாலா விஜயன் வந்திருந்தனர். செந்திலுடன் ஃபோனில் செம அரட்டை அடித்திருந்தாலும் நேரில் பார்த்து அரட்டையடிப்பது இன்னும் சுவாரஸ்யம்.

படம் ஆரம்பிக்கும் முன் rest room தேடி பிஸ் அடித்து விட்டு வர வேண்டும் என்றால் பேச்சு சுவாரஸ்யத்தில் அது மறந்தே விட்டது.

படம் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் தான் “ஆஹா” எனத் தோன்றியது. Rest room போயிருக்கலாமோ எனத் தோன்றியது.

Interval விடுவார்களா? அவசரமாக எழுந்து rest room போகலாமா என பல யோசனைகள்.

தயாரிப்பாளர், இயக்குநர் சுரேஷ் காமாட்சி வேறு சைடில் நின்று “மிக மிக அவசரம்” என்று நம் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தார்..

ஒரு வழியாக Intermission போட்டார்கள். செந்திலையும்(ஆரூர் மூணா) கூப்பிடுவோம் அவரும் நிறைய Travel , Traffic தாண்டி வந்திருக்கிறார்…எப்படியும் அவருக்கும் “மிக மிக அவசரமாக” தான் இருக்கும் என்ற அனுமானத்துடன் அழைக்க அவரும் சம்மதித்து வந்தார்.

இப்போது ஒரு சிக்கல். வந்திருக்கும் புது இடத்தில் “Rest Room” எங்கிருக்கிறது என்று தெரிய வேண்டும்.

Blue Sattai மாறனின் ஒளிப்பதிவாளர் கதிரவனிடம் கேட்டேன்.

“நேரா போய் Left ” என்றார்.

கதவைத் திறந்து வெளியே இன்னொருவரிடம் கேட்டேன்.

அவரும் “Left..Left” என்றார்.

அவசர அவசரமாக போய் Rest Room கதவைத் திறந்து ஒரு வழியாக ஒரு கடமையை முடித்துக் கொண்டிருக்கும் போது …

“தம்பி” என்று முனகியது போல் ஒரு குரல்…


“செந்தில் தான் கூப்பிடுகிறாரா?” சைடில் பார்த்தேன். இல்லை.

அவர் அவருடைய அவசரத்தில் கவனமாக இருந்தார்.

எனக்கு பின்னாடி யாரோ நிற்கிறார்கள் என்பதை யூகிக்க முடிந்தது. ஆனால்
எனக்கு இன்னும் முடிந்த மாதிரி இல்லை. பொறுமையாக நேரம் எடுத்து பிஸ் அடித்து Zip ஐப் போட்டு, Belt ஐ இறுக்கி பொறுமையாக திரும்பினால்…..சீமான்!!!

அப்போது எனக்கு தோன்றியது தான் தலைப்பு.

#AntiIndian


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.