
Windy App
தமிழ்நாடு முழுவதும் சிகப்பு நிறம் படர்ந்திருக்கிறது. பரவலாக மழை பெய்து வருகிறது.
போன புதன்கிழமைக்கு பிறகு சென்னையில் இன்றைய மழையின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.
மழையின் அளவு, புயலின் அடுத்த 7 நாட்களின் நகர்வு எனக்காண இந்த Windy App பெரிய உதவியாக இருக்கிறது.
Install செய்து விட்டு Radar & Satellite — Satellite என்று Navigate செய்து வந்தால் இந்த Map நமக்கு காற்றழுத்த தாழ்வு நிலையின் தற்போதைய நிலை பற்றி படமாக காட்டி விடுகிறது.
இதே போல் “The Weather Channel” App மற்றொரு உபயோகமான செயலியாகும். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்தின் தட்ப வெட்பம், மழை என 10 நாட்களுக்கு கொடுத்து விடுகிறது. இந்த 10 நாட்களுக்கு கொடுக்கப்படும் தட்பவெப்ப நிலையில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. காரணம், காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு இவர்களும் தங்கள் 10 நாள் Weather Data வை மாற்றிக் கொண்டேயிருபாபார்கள்.
ஆனால் Windy App படமாக காட்டி விடுவதால் அவற்றை மாற்ற முடியாது. மழை பொழிவு மட்டுமில்லாமல் பல்வேறு வானிலை குறித்த விஷயங்களை இந்த App இல் பார்க்க முடிகிறது.
இனி வரும் ஒவ்வொரு நவம்பர் டிசம்பர் மழைக்கும் இந்த App உபயோகமாக இருக்கும். #ChennaiRains2021
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.