சிறுகதை 10 : இ.யெம். ஐ – சிவஷங்கர் ஜெகதீசன்
முகேஷூக்கு இப்போதெல்லாம் செம சோம்பேறித்தனம். காலையில் இப்பொழுதெல்லாம் சீக்கிரம் எழ முடியவில்லை. தினமும் வேலை முடித்தவுடன் ஏதாவது ஒரு OTT பிளாட்ஃபார்மில் ஒரு படம் அல்லது இரண்டு படம் பார்த்து விட்டு தூங்கும் போது அதிகாலை 3 மணி ஆகியிருக்கும்.
பிறகு படுத்து எழுந்திரிப்பது 9 மணி அல்லது காலை 10 மணி. மாநகர போக்குவரத்து நெரிசலில் அடித்து பிடித்து ஆஃபிஸ் போக 11:30 ஆகி விடும்.
இன்றும் அதே போல் ஆஃபிஸுக்கு லேட். இவ்வளவு நாள் பொறுத்து பார்த்த மேனேஜர் இன்று பொறுமையிழந்து முகேஷை வைஸ் பிரெஸிடண்டிடம் போட்டுக் கொடுத்து விட்டார்.
மெயில் பாக்ஸில் வைஸ் பிரசிடெண்ட் தன்னை வந்து பார்க்க சொல்லி மெயில் அனுப்பியிருந்தார்.

முகேஷ் பயந்து கொண்டே வைஸ் பிரசிடெண்ட் ரூமுக்கு போனான். ஏற்கனவே அங்கு ஹச் .ஆர் ஹெட் அமர்ந்திருந்தார்.
இருவரும் முகேஷ் லேட்டாக வருவதற்கான காரணத்தை ஃபார்மலிட்டிக்காக விசாரித்தனர். பிறகு 3 மாதம் தற்காலிக பணி நீக்கம் செய்வதாக ஏற்கனவே டைப் செய்த லெட்டரை ஹச். ஆர் ஹெட் முகேஷிடம் கொடுத்தார்.
எல்லாமே சில காலமாய் தப்பாகவே போய்க் கொண்டிருப்பதால் முகேஷ் இதையெல்லாம் எதிர்பார்த்தான்.
முகேஷை 3 மாதத்திற்கு பிறகு வந்து சேர்ந்து கொள்ள சொன்னார்கள். முகேஷ் வெளியே வந்தான்.
பாபு, சுரேஷ், பரமேஷ் ஆறுதல் கூறினார்கள்.
முகேஷ் எதிர்பார்க்காத கொரோனா லாக்டவுன் அடுத்த வாரம் தொடங்கியது. வேறு வேலை தேட முடியவில்லை. வெளியே செல்ல முடியவில்லை. மற்றொரு கம்பெனியில் கிடைக்கும் என்று நினைத்த வேலை தற்போதைக்கு பொஸிஷன் இல்லை என சொல்லி விட்டனர்.
இந்நிலையில் பெர்சனல் லோன், வீட்டுக்கடனுக்கு பேங்க் அக்கவுண்டில் ₹ 45000 இருபதாம் தேதிக்குள் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்த மாதம் இ.யெம்.ஐ கட்டாமல் போய் அதற்கு வட்டி கட்ட வேண்டி வரும்.
சம்பளம் மூன்று மாதங்களுக்கு வராது எப்படி இ.யெ.ம் கட்டுவது? வேறு வழியே இல்லை. கடன் அட்டையை தீட்ட வேண்டியது தான். கடன் அட்டை மூலம் பணம் PayTM, Payzapp போன்ற app கள் மூலமாக வங்கி அக்கவுண்டில் கிரெடிட் செய்தால் அதற்கு ஒரு 2.5 % சார்ஜ் கட்ட வேண்டியிருக்கும். ₹45000 க்கு ₹1125 கட்ட வேண்டியிருக்கும்.
ஏடிஎம் களில் கிரெடிட் கார்டு சொருகி டைரக்டாக பணம் எடுத்தால் தினமும் எடுத்த பணத்திற்கு மீட்டர் வட்டி போல் வட்டி போடுவார்கள். என்ன செய்யலாம் என்ற யொசனையிலேயே ரெண்டு நாள் போய் விட்டது.
இன்னும் பத்து நாட்கள் தான் டீயு கட்டுவதற்கு இருக்கிறது. திடிரென ஓர் ஐடியா தோன்றியது.
Flipkart இல் கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஒரு டீவி வாங்குவோம். பிறகு கேன்சல் செய்தால் அந்த பணத்தை பேங்க் அக்கவுண்ட் கேட்டு அதில் தான் ரீஃபண்ட் செய்கிறார்கள். வட்டி இல்லாமல் செர்வீஸ் சார்ஜ் இல்லாமல் நம் பணம் அக்கவுண்டிற்கு வந்து விடும் என்ற திட்டம் தான் அது.
அடுத்த நாள் ஒரு சோனி பிரேபியா டிவி ₹50000 க்கு வாங்கினான். டெலிவரி டேட் 20-மார்ச் என்றிருந்தது.
கேன்சல் செய்தால் எப்போது ரீஃபண்ட் ஆகும் என பதட்டம் அதிகரித்தது முகேஷுக்கு.
20-மார்ச்க்கு பிறகு ரீஃபண்ட் ஆனால் டீயு டேட் முடிந்து வரும் பணத்தினால் புண்ணியமில்லை.
அவசர அவசரமாக ஆர்டரை கேன்சல் செய்தான். ஒரு ஃபார்மில் முகேஷ் எதிர்பார்த்தது போலவே பேங்க் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் டீடெயில்களை அந்த சைட் கேட்டது. பூர்த்தி செய்து முடித்தவுடன் நிம்மதியானான்.
ஆனால் எந்த தேதியில் ரீஃபண்ட் ஆகும் என குறிப்பிடவில்லை..
சற்று பதட்டத்துடனே நான்கு நாட்கள் போனது.
20-மார்ச் காலை 10:30
மதியம் தான் இரண்டு இ.யெம்.ஐ க்கும் கடன் தொகையை டெபிட் செய்வார்கள். அதற்குள் பணம் கிரெடிட் ஆகி விட வேண்டும் என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டான்.
பாபுவிற்கு போன் செய்து இதைப் பற்றி சொன்ன போது ‘செம ஐடியாடா. 2.5% செர்வீஸ் சார்ஜ் சேவ் பண்ணிட்ட, என பாராட்டியிருந்தான். ஆனால் கேன்சல் செய்த ஆர்டரின் பணம் இன்னும் வந்து சேரவில்லை.
ஒரு வேளை டிவியை அனுப்பி விடுவார்களோ? பணம் என்னவாகும்? என்று பல யோசனைகள். அப்படியே தூங்கி போயிருந்தான் முகேஷ்.
மணி மதியம் 2.
திடீரென்று தலைமாட்டில் வைத்திருந்த போனில் மெசேஸ் நோடிவிகேஷன் சத்தம் கேட்டது.
எழுத்து சோம்பலுடனும் பதட்டத்துடனும் பார்த்தான் முகேஷ்.
₹50000 பேமண்ட் கிரெடிடட் டு சேவிங்கஸ் அக்கவுண்ட் என்ற மெசேஜ் வந்திருந்தது. நிம்மதி பெருமூச்சு விட்டான் முகேஷ்.