தாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்

தாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்

இயக்குநர் ராசி.அழகப்பன் அவர்களின் கவிதைத்தொகுப்பான ‘தாய்நிலம்’ படிக்க படிக்க அட்டகாசமான வரிகள்.

படங்களும் வரிகளும் 90 களுக்கு முன் இந்திய நிலப்பரப்பை, வயல்வெளியை, கிராமங்களை, வரப்புகளை நம் கண்முன் நிறுத்துகின்றன.

இயற்கை வாழ்வியலை நாம் தொலைத்து விட்டதை ஆழமாக பதிந்துள்ளார்.

எனக்கு பிடித்த வரிகள் கிழே..

“துளித்துவம் விரித்து
தனித்துவமான
கருவறை தாய்நிலம்…
காற்றும் ஒளியும்
வானும் திசையும்
உழன்ற உலகம்
தாய் நிலம்.”

“வைகறையில்
விழித்த ஏர்முனை

கண்காட்சியில் மழுங்குகிறது.

நீரிறைக்கையில்
பாடும் ஏற்றப்பட்டு எஃப் எம்மில் ரீமிக்ஸ் ஆகி ஒலிக்கிறது.

கருவூலங்களான வயல்கள் இன்று
அடுக்கு மாடிகளுக்கு அடிபணிந்துவிட்டன”

பூமியின் உயிரெழுத்து நீர்

மெய்யெழுத்து மரங்கள்
உயிர்மெய்யெழுத்து காடுகள்
ஆயுதம் தான் – மனிதன்.

“நாகரீக உலகில் மண்ணை விற்று
மாடியில் பயிர்த் திட்டம்”

“நிலம் நடந்து போவதற்கல்ல நடந்து வாழ்வதற்கு..”

மழை வேண்டி தவமிருந்தவர்களுக்கு வானம் சொன்னது.. ‘மரம் வெட்டி யாகம் நடத்துவதை விட
மரம் நட்டு விவேகமாய் வாழ்ந்து பாரென’…!

மொழிகளின் ஜன்னலில் எட்டிப்பார்த்தேன்
மதங்களும், முகங்களும் களிநடம் புரிந்தன!

ஆதாரம் என அறிவால் நகர பொருள்முதல் ஆகி
ஆணைகள் இட்டுவாழ்வியல் முனைந்தது!

அறம் எது? மறம் எது?
புறவெளித்தேடலில்
வென்றவன் வாக்கு
அறமென உயர்ந்தது! 💐💐💐👌🏻👍🏻

புயல் – மனிதன் மண்வெளியில் நிகழ்த்திய ரணக்குறியீடுகளை அழித்து எழுத வரும் புதிய ஆசான் 👍🏻👌🏻💐.


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.