மாயக்குதிரை- கேஸினாள்-சப்பாத்து- தமிழ்நதி

Casino க்களில் Slot Machine கள் கொடுக்கும் Jackpot போதை, addiction பலரால் விட முடியாதது.. அதில் வெற்றி பெறும் Jackpot வாய்ப்பு 1/10 மட்டுமே. அதே போல் ஒருவர் Slot Machine இல் அழுத்தியவுடன் Random Number Generator மூலம் 5 இலக்கமோ மூன்று இலக்கமோ அடுத்த நொடி முடிவாகி விடும். நமக்கு முன்னால் சுத்தும் இலக்கங்களும், எழுத்துகளும், பூக்களும், பன்றிகளும், கடற்கன்னிகளும் ஒரு பொய்யான சுற்றல் தான். நம் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும் யுக்திகளில் ஒன்று.

அதில் மூழ்கிய ஒரு பெண் அதற்காக பொய் சொல்லி பணம் சேர்த்து அதைக்கரைப்பதும், அந்தப் பெண் Jackpot என்னும் மாய நொடி சந்தோஷத்திற்காக ஏங்குவதும் பணத்தை விரயமாக்குவதும், இந்த போதையிலிருந்து மீள முடியாமல் தவிப்பதும் இந்த மாயக்குதிரை கதையின் கரு.

இந்தக்கதையில் Boyfriend பெயர் சுதன். ஆனால் அந்த கேஸினாளுக்கு(அந்த Gambling addict பெண்) பெயரே இல்லை. நின்றாள், வந்தாள், சென்றாள் என்றே கதையை முடித்து விட்டார்.

இதைப்பற்றி நேற்று பிரபஞ்சன் பிறந்த நாளுக்கு வந்த கதையின் எழுத்தாளர் தமிழ்நதியிடம் கேட்ட போது…’பெயர்…ஏனோ வைக்கவில்லை’ என கூறினார். .

இந்தக்கதைகளில் வரும் வசனங்கள் ஈழத்தமிழில் ஒரு புதிய பரிமாணத்தை,வாசிப்பனுபவத்தை கொடுத்தது.

கடன் என்ற கதையில் சத்தியன் எனும் கதா நாயகன் இருபத்தி எட்டாயிரம் டாலர்கள் கடன் வாங்கி கட்ட முடியாம ல் தன் மனைவி யாஷினியை விட்டுவிட்டு தற்கொலை செய்ய ரயில் நிலையம் செல்வதாக அமைகிறது. கடன் கொடுத்த தனபாலன் பதறிக்கொண்டு வருவது போல் எழுதியிருக்கிறார். சுத்தமில்லாத வீட்டை விவரிப்பதும் கடன் தொல்லையில் இருப்பனின் மனநிலையை விவரித்த விதம் அருமை.

திமிங்கலம் வாலால் சுழற்றியடித்தது போல் கடன் பற்றிய நினைவுகள் இரவில் சத்தியனை சுழற்றியடித்தது என எழுதியிருக்கிறார்.👍🏻💐.

சப்பாத்து

இந்தக்கதையில் வரும் சப்பாத்து எனும் வார்த்தை எனக்கு முற்றிலும் புதிய வார்த்தை.

சப்பாத்து அணிந்து சத்தியன் சென்றான், என எழுதியிருந்ததில்…Jeans ஆ அல்லது Shoe வா…என புரியவில்லை.

வீதியை செப்பனிடும் தொழிலாளர்கள் அணியும் ,’கனத்த சப்பாத்துகள்’ என மற்றொரு இடத்தில் மேற்கொள் காட்டப்பட Shoe வாக இருக்கும்..என..யூகித்து கொண்டேன்.

எழுத்தாளரிடம் கேட்ட போது ஷீ தான் என ஆமோதித்தார். இங்கு நாங்கள் பயன்படுத்தாத புதிய வார்த்தை இது என்றவுடன் அகரமுதல்வனும் இது இங்கிருப்பவர்களுக்கு புரியாத வார்த்தை என ஆமோதித்தார். 😊. அடுத்த முறை அருஞ்சொற்பொருள்/அகராதி தன் சிறுகதைகளுடன் சேர்ப்பதாக நக்கலடித்தார். 😊.

ஈழத்தமிழில் கதைகளில் வரும் வசனங்கள் முற்றிலும் புதிய வாசிப்பனுவமாய் அமைந்தது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.