யாரெல்லாம் தேர்தல் பிரச்சாரங்களில்…’மக்கள்.. மக்கள்…’ என்று ஆரம்பிக்கிறார்களோ…அவர்களெல்லாம் தன் பழைய நிலையிலிருந்து கீழே தான் சென்றிருக்கிறார்கள்.
விஜயகாந்த் 29 சீட் ஜெயித்த பிறகு…’மக்களே…எனக்கு ஆத்ரங்கள் வருது மக்களே’ என ஆரம்பித்தார். அடுத்த தேர்தலில் 0.
சீமான்… கொஞ்சம்.. பெயரெடுத்து கொண்டிருந்தார். ‘மக்களுடன் தான் கூட்டணி’….’மக்களே…’ என கர்ஜித்தார். அடுத்த தேர்தலில் Duck out. சின்னமும் அவுட்.
பா.ம.க ‘மக்கள்‘ தொலைக்காட்சி ஆரம்பித்தது. 2 MP சீட் ..4,5 MLA சீட் வெல்பவர்கள் 1MP சீட்…அதுவும் அன்புமணி மட்டும் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது என்றாகி போனது.
இப்போது கமல் ‘மக்கள் நீதி மய்யம் ‘ ஆரம்பித்து ‘மக்களுடன் தான் கூட்டணி’ என சொல்ல ஆரம்பித்திருக்கிறார். முடிவு தெரிந்தது தான்.
மக்கள் என்ற சொல் Bad Omen ஆகிக் கொண்டிருக்கிறது.