Bhayanakam | Malayalam | 2018 | 105′

சென்னை திரைப்பட விழாவில்(#CIFF2018) பார்த்த படங்களில் அட்டகாசமான படம் பயானகம். இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்தில் சொல்லப்படும் இந்த கதையில்புதிதாக மாற்றலாகி வரும் மாற்றுத்திறனாளி Postman ஐ அந்த ஊர்காரர்கள் இன்முகத்துடன் வரவேற்கிறார்கள்.

முதலாம் உலகப்போரில் ஒரு காலை இழந்தவர். அவர் ஆஷா சரத் வீட்டில் தங்கிக் கொண்டு ஊர்காரர்களுக்கு அவரவர்களுடைய மகன்களினிடமிருந்து வரும் Money Order ஐ Deliver செய்கிறார். இவர் வந்தாலே பணமும் சேர்ந்து வருவதால் சந்தோஷமாக வரவேற்கிறார்கள் எங்கு சென்றாலும். இரண்டாம் உலகப்போர் தொடங்கவே.. இதே Post Man மரண செய்திகளை சொல்லும் Telegram களை டெலிவர் செய்ய ஆரம்பிக்க ஊரே சபிக்கிறது. இவரைப் பார்த்தாலே கெட்ட சகுணம் ஆகி விடுகிறது மக்களுக்கு. சிலர் இறந்த செய்தியை சொல்லாமல் வீடுகளின் வாசலிலேயே தந்தியை வைத்து விட்டு செல்கிறார். பல வீட்டுக்கு துக்க செய்தியை சொல்லாமலே இவர் மனதுக்குள் புழுங்கும் காட்சிகள், குமுறல்கள் அற்புதமாக நடித்திருக்கிறார் Renji Panicker.

Cinematography அட்டகாசம். ஏரியில் இவர் படகில் செல்லும் காட்சிகள் கவிதைத்தனமான காட்சிகள். பல காட்சிகளில் இயக்குனர், ஒளிப்பதிவாளர் இருவரும் அசத்தியிருக்கிறார்கள். இயக்குநர் Jeyarajkku ஒரு 💐💐. பின்னனி இசை, ஆஷா சரத்தின் நடிப்பு அருமை. #Bhayanakam #Malayalam #CIFF2018 #IndianPanorama


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.