கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் வலைப்பக்கத்தில் வாசித்த இக்கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. சமகால தமிழ்கவிதையுலகில் ஷங்கர் தனித்துவமானர். அவரது சிறந்த கவிதைகளும் இந்த வலைப்பக்கத்திலுள்ளன. •• ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான்…