சிக்கனம் சேமிப்பு முதலீடு – சோம. வள்ளியப்பன்

சிக்கனம் சேமிப்பு முதலீடு – சோம. வள்ளியப்பன்

குமுதம் வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தில் சீட்டு கம்பெனிகளில் முதலீடு செய்வதில் ஆரம்பித்து தங்கம், தங்க நாணயம், Gold ETF, ELSS, Medical Insurance, Life Insurance, Motor Insurance பற்றிய தகவல்களை கொண்டுள்ளது. Chit Fund Act 1982, செல்வ மகள் சேமிப்புத் திட்டம்(Suganya Samriddhi Yojana), Health Insurance பற்றி விரிவாக சொல்லியிருக்கிறார்.

  1. குறிப்பாக, செல்வ மகள் சேமிப்புத்திட்டத்தின் விதிமுறைகள்,
  2. அதன் முலம் கிடைக்கும் 9.1% வட்டி,
  3. திட்டத்தில் எந்த வயதில் உள்ள பெண் குழந்தைகள் சேரமுடியும்,
  4. ஒரே குடும்பத்தை சேர்ந்த எத்தனை குழந்தைகள் இந்த திட்டத்தில் சேரலாம்,
  5. திட்டத்தின் 18 வருட lock-in Period,
  6. SIP போல குறைந்த பட்சமாக மாதா மாதம் எவ்வளவு கட்ட வேண்டும், விதிவிலக்குகள் என விரிவாக எழுதியிருக்கிறார்.

முதலீடுகளில் Balanced Approach பற்றி நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார்.

சீட்டு கம்பெனிகள் பற்றி எழுதும் போது…

  1. சீட்டு கம்பெனிகள் வேறு தொழில் வியாபாரம் செய்யக்கூடாது.
  2. அதிகபட்சம் 6 லட்ச ரூபாய்க்கு மேல் சீட்டு நடத்தக்கூடாது.
  3. பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்(Private Ltd) அவர்களுடைய முதலைப்போல பத்து மடங்கு பணத்திற்கு மட்டுமே Chit நடத்த முடியும்.
  4. சீட்டு நடத்துபவர் , அவர் நடத்துகிற ஒரு group இல் ஒரு மாதம் சேரக்கூடிய மொத்த தொகையை வங்கியில் deposit செய்துவிட்டு அந்த வைப்புப் பத்திரத்தை (FDR) பத்திர பதிவாளரிடம் பிணையாக ஒப்படைக்க வேண்டும். அப்படிச் செய்த பிறகு தான் அந்த group ஐ தொடங்க அனுமதி வழங்கப்படும்.
  5. மாத ஏலம் முடிந்த பிறகு, எவருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது போன்ற விவரங்களை Minutes ஆக எழுதி, உடன் பணம் உரியவர்க்கு பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ரசீதையும் பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என பல்வேறு உபயோகமான தகவல்கள் இந்த புத்தகத்தில் இருக்கின்றன.

Stock Market, Mutual Funds முதலீடுகளை பற்றி இன்னும் விரிவாக சொல்லியிருக்கலாம். Equity Market Investments பற்றி மட்டும் cover செய்திருக்கிறார்.

தங்க நகைகள் பற்றி சொல்லி விட்டு மறுபடியும் தங்க நாணயம், Gold ETF என தங்கத்தைச் சுற்றியே முதலீடுகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.