Cinematographer and Writer  CJ Rajkumar rocked with AI film making book at the right time

Cinematographer and Writer  CJ Rajkumar rocked with AI film making book at the right time

ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு-ஆசிரியர், எழுத்தாளர் சி ஜே ராஜ்குமார் அவர்கள் சரியான நேரத்தில் இந்த “AI filmmaking – code to cinema” புத்தகத்தை கொண்டு வந்திருக்கிறார்(14 வது புத்தகம்)என்றே சொல்ல வேண்டும்.

பல காலமாக அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். உங்கள் Cinematography வகுப்பில் மாணவனாக அமர்ந்து கற்றுக் கொள்ள ஆசையென்று.

அது இன்று(12-Jan-2026) அமைந்தது.

Discovery சென்றவுடன் இயக்குநர்  Brindha Sarathy அண்ணன், Hari Haran , Sengovi Guru  மற்றும் Ram Arunachalam அவர்களுடன் ஒரு செம அரட்டை.

பிறகு மேலே ஒரு AI film making class, அதன் பிறகு Book launch.

இந்த “AI Film making”   புத்தகத்தை பொறுத்தவரை

1. Prompt Engineering கற்றுக் கொள்வது சினிமா மாணவர்களுக்கு ஏன் அவசியமாகிறது?

2. AI – ஒரு trend ஆக பார்க்காமல் ஒரு cinematic process ஆக பார்ப்பது, சினிமாவிற்கு தகுந்தாற் போல் AI ஐ பயன்படுத்துவது,

3. சினிமா கற்றுக் கொள்ளும் மாணவர்கள் சினிமாவிற்கு தேவையான writing, Visual development, ஒளிப்பதிவு, post-production process அனைத்திற்கும் AI எப்படி உதவிகரமாக இருக்கும்,

4. ஒரு ஒளிப்பதிவாளர் கண்ணோட்டத்தில் AI, அவர் செய்து கொண்டிருக்கும் வேலையை எப்படி மேம்படுத்தி கொடுக்கும்,

5. ஒரு வேலை நாளில் குறுகிய நேரத்தில் AI மூலம் ஒளிப்பதிவை செய்து முடிப்பது, அதற்கான வழிமுறைகள் இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டிக்கிறது.

ப்ரசன்னா வெங்கடேஷ் – இன்று தான் சந்திக்கிறேன்.

மிகச் சிறப்பான AI generated imagery வகுப்பு ஒன்றை எடுத்தார்.

a.Stainless Product களை படமெடுப்பதில் இருந்த ஒளிச் சிக்கல்கள் – அதை AI மூலம் உருவாக்கும் போது வந்த சிக்கல்கள்

b. AI Hallucination – சில சமயம் AI குழம்பி போவதால் வரும் சிக்கல்கள், அது குழம்பி போய் கொடுக்கும் படங்கள், வீடியோக்கள்

c. உணவுத்தட்டுகளில் தென்னிந்திய உணவு வகைகள் கொண்ட படங்களை AI இடம் கேட்ட போது வந்த சிக்கல்கள்

d. இடியாப்பத்தையே காட்டி – அதை AI படமாக generate பண்ணும் போது வந்த இடியாப்ப சிக்கல்களை பட்டியலிட்டார்.

அவருக்கு Sivashankar Jagadeesan foundation டைரி கொடுத்து விட்டு

“Flow” பற்றி பேசவில்லையே? என்று கேட்டதற்கு இந்த மாணவர்களுக்கு அது சரியாக இருக்காது என பதிலளித்தார்.

Prasana Venkatesh மகள் Shreya Prasana இந்த புத்தகத்தில் AI based images மற்றும் படங்களுக்கு உதவியிருக்கிறார். Vediyappan M Munusamy  அண்ணா அவரையும் பேச வைத்தார்.

இயக்குநர் R Chezhiyan Isc  அவர்களை பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கிறேன்.

“மெலிஞ்சுட்டிங்க” என்றவரிடம் சிவஷங்கர் ஜெகதீசன் foundation பற்றி சொன்னேன்.

“Tolet”  வெளியான போது காசி டாக்கீஸில் FDFS பார்த்து “இது தமிழர்கள் அனைவரும் பார்த்து கொண்டாட வேண்டிய படம்” என நான் Shruti TV  க்கு பேசியிருந்த காணொளி பல பேரை சென்றடைந்திருந்தது.

அதன் பிறகு 3-4 முறை சந்தித்து பேசியிருக்கிறோம்.

இயக்குநர் ஒளிப்பதிவாளர் செழியன் அவர்கள் பேசிய 10 நிமிட காணொளி YouTube channel இல் அவர் அனுமதி பெற்று போடுகிறேன்.


ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் CJ Rajkumar அவர்கள்  இது வரை எழுதியுள்ள ஒளிப்பதிவு மற்றும் post production பற்றிய புத்தகங்கள் 13.

அவற்றை கீழே தொகுத்திருக்கிறேன்.

1. அசையும் படம்
2. பிக்சல் (Pixel – Tamil)
3. Pixel (English)
4. க்ளிக்
5. ஒளி ஓவியம்
6. திசை ஒளி (Advanced Film Lighting)
7. கேமரா கண்கள்
8. ஒரு துளி நட்சத்திரம்
9. ஃபோகஸ் (Focus – Cinema Lens and Composition)
10. டிஜிட்டல் நிறங்கள்
11. Digital Hues (Digital Color Grading)
12. Binary Images
13. Moving Shots

#AIFilmmaking
#AIbasedCinematography
#AIbasedImagery
#CinematographerCJRajkumar
#சிஜேராஜ்குமார்
#CJRajkumar
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Discover more from Sivashankar Jagadeesan

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.