
ஒரு வாரம் லேட் தான். இருந்தாலும் முன்னரே எழுதி வைத்ததை இங்கே பகிர்கிறேன்..
இளையராஜா – உணர்வுகளின் ராஜா
வேகமாய் இசை கோர்க்கும் ராகதேவன் ராஜா
விடுப்பேதும் எடுக்காத ஒழுக்கத்தின் ராஜா
மூன்று தலைமுறைகள் ரசித்த தன்னடக்க ராஜா
அவர் மூகாம்பிகை அருளிய பண்ணைபுரத்து ராஜா
ஒரே ஸ்வரத்தில் மெட்டமைத்த ராஜா
ரசிகர் பாசறை தனக்கென கட்டமைத்த ராஜா
எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என சேதி சொன்ன ராஜா
பாட்டாலே புத்தி சொன்ன பொக்கிஷம் நீ ராஜா
மண் மணம் பாடிய ராஜா
இணையத்தில் மக்கள் விரும்பி தேடிய ராஜா
தொலைதூர பயணங்களில் தேன்நீ ராஜா
பல கோடி நூறாண்டு வாழ்நீ ராஜா
#ராகதேவன் #இசைஞானி #இளையராஜா
#Ragadevan #Maestro #Isaignani #Ilaiyaraaja
#ilaiyaraajamusic #ilaiyaraajafans
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan
Discover more from Sivashankar Jagadeesan
Subscribe to get the latest posts sent to your email.