சென்னை புத்தகக் காட்சி 2023 – இரண்டாம் முறை

சென்னை புத்தகக் காட்சி 2023 – இரண்டாம் முறை

நேற்று(21-Jan-2023) சென்னை புத்தகக்காட்சிக்கு இரண்டாம் முறை செல்லும் வாய்ப்பு அமைந்தது.

கூட்டம் அதிகமாகவே இருந்தது. நமக்கு தெரிந்த முகங்களை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இல்லை.

இம்முறை தம்பிகள் தேனி முத்து பிரசாத் GOkul Srithar , எழுத்தாளர். ரசூல் பின் அப்பாஸ் , VJ Karthik மற்றும் பார்த்திபன் ஆகிய ஐவரும் என்னுடன் இணைந்து கொண்டனர்.

காலையிலேயே Wavoo Fariz அழைக்க அவரும் மாலை புத்தகக் காட்சியில் எங்களுடன் இணைந்து கொண்டார்.

உள்ளே முதலில் பார்த்தது “We Can Books” Guhan Kannan . நலம் விசாரித்து விட்டு,

“Investigation, RAW, Mossad என்று ஏதாவது எழுதியிருக்கிறீர்களா? Police நிரந்திரமாக உங்கள் வீட்டை நோட்டமிடுகிறார்களா? ” என்று கேட்டால் அதற்கேற்றாற் போல் புதிய புத்தகம் “உளவு ராணிகள்” எடுத்துக் காட்டுகிறார்.

புத்தகங்களை பார்க்கையில் அடுத்தது தெரிந்த முகம் Kamalabala B Vijayan அவர்கள். நலம் விசாரித்து விட்டு “புத்தக தானம் ” அரங்குக்கு சென்று ரசூலுடைய “காலாவதியான கவிதைகள்” கவிதைத் தொகுப்பை சிறைத்துறை DIG க்கு வழங்கினோம்.

“சில கவிதைப் புத்தகங்களை வைத்துக் கொள். சந்திக்கப்போகும் எழுத்தாளர்,பதிப்பாளர்களுக்கு குடு” என ரசூலிடம் மதியம் அலைப்பேசியில் சொல்ல அதே போல் ரசூலின் “காலாவதியான கவிதைகள்” புத்தகம் பல எழுத்தாளர், பிரபலங்களுக்கு புத்தகக்காட்சியில் நேற்று சென்றடைந்தது.

பூவுலகின் நண்பர்கள் பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal) சுந்தர்ராஜன் அவர்களை சந்தித்து பேச முடிந்தது. சென்ற வருடமும் இன்முகத்துடன் நம்மை வரவேற்றுப் பேசினார். சூழலியல் சார்ந்த புத்தகங்களை குறிப்பாக நம்மாழ்வார், ஜியோ டாமின் புத்தகங்களே அதிக அளவில் வாங்கியிருந்தேன். இம்முறையும் அங்கே 4 புத்தகங்களை அள்ளிக் கொண்டு விடைபெற்றோம்.

Priyadharshini Gopal முகமலர்ச்சியுடன் நம்மை சந்தித்தவர் நிறைய நிமிடங்கள் புத்தகங்கள், வாசிப்புப்போட்டி என உற்சாகமாக உரையாடினார். “வாசிப்பை நேசிப்போம்” முகநூல் குழுவின் முக்கிய அங்கம்.‌ தம்பிகள் ரசூல், கார்த்திக்கை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.

டீ சாப்பிட்டு விட்டு திரும்பி வர ப்ரியதர்ஷனி “கலக்கல் டீரீம்ஸ்” அரங்கில் முதலாளியாக மாறியிருந்தார்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களை பார்த்து வழியில் நலம் விசாரித்து விட்டு Food Court க்கு நகர்ந்தோம்.

பெரிய திரையின் அருகில் நம் குழுவின் ஆழ்ந்த வாசிப்பாளர்களில் ஒருவரான பூபாலன் வைரமுத்து வை சந்திக்க முடிந்தது. சூழலியல் சார்ந்த புத்தகங்களை படிக்கச் சொல்லியிருக்கிறேன். சில வார்த்தைகள் தமிழா? வடமொழியா? என பூபாலக்கண்ணனிடமும் அவரது நண்பரிடமும் சந்தேகங்களை கேட்டு தெளிவானேன்.

அடாவடி விலையாக ஆவாரம்பூ டீ ₹30 ஆக வைத்திருந்தார்கள். முதல் முறை ₹15 க்கு வாங்கியதாக ஞாபகம். தம்பிகளுடன் ஆவாரம்பூ டீ மற்றும் நவதானிய சுண்டல் சாப்பிட்டு விட்டு நகர்ந்தோம்.

திரும்ப அரங்கிற்குள் வர எழுத்தாளர் Soma Valliappan அவர்களை சந்திக்க முடிந்தது. இவருடைய சூழலியல் சார்ந்த, நெகிழிகளின் பயன்பாடுகளால் வரப்போகும் ஆபத்துகளை “அவசரம்” எனும் புத்தகம் பற்றிய முழுமையாக படித்து வாசிப்பனுபவம் எழுதியிருந்தேன்.

இவருடைய நிதி ஆலோசனைகளும், மனித வள மேம்பாட்டு புத்தகங்களும், ஆய்வுக்கட்டுரைகளும் பெயர்பெற்றவை என்றாலும் தன்னுடைய genre இல்லாத சூழலியல் சார்ந்த புத்தகம் என்பதில் வாசகர்களிடையில் பெரிய வரவேற்பில்லை என தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தார். அவருடைய புத்தகங்கள் எந்த அரங்கில் கிடைக்கும் என விசாரித்து கிழக்கு பதிப்பகத்தில் “நாட்டுக்கணக்கு” புத்தகத்தை வாங்கினோம்.

“கலக்கல் டீரீம்ஸ்” Kalakkal Dreams Publication தசரதன் அவர்களை சந்தித்து நலம் விசாரித்தோம். கொரோனாவுக்கு முன் “கலக்கல் டீரீம்ஸ் ” வடபழனியில் Raahat Plaza வில் இருந்தது. அங்கே நம் குழுவின் ஆழ்ந்த வாசிப்பாளர்களில் ஒருவரான நித்யா குமார் எழுதிய “பரிவை படைப்புகள்” மற்றும் “எதிர்சேவை” நாவலை எடுத்துக் கொண்டேன்.

நம்மை பார்த்தவுடன் பேரானந்தத்துடன் வரவேற்றவர் Bharathi Puthakalayam ஆசிரியர் தோழர். நாகராஜன் அவர்கள்.
தம்பிகளை அவருக்கு அறிமுகப்படுத்தி புதிய புத்தகங்கள் பற்றி விசாரித்ததும் இரண்டு புத்தகங்கள் இலவசமாக தந்து விட்டார். வாசிப்புப் போட்டிக்கான பரிசுப் புத்தகங்களை இவரிடம் ஏற்கனவே கேட்டிருந்தேன். இம்முறையும் தருவதாக நமக்கு உறுதியளித்தார்.


நடுவில் போதி அரங்கில் பத்திரிக்கையாளர் J Bismi அவர்களை சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். தினமும் செய்யும் விஷயங்களில் “வலைப்பேச்சு” எபிசோட் களை தவறாமல் பார்ப்பதும் சில வருடங்களாக ஒன்றாகிப் போய்விட்டது.

“வலைப்பேச்சு” Anthanan Shanmugam அவர்களுக்கு “வெட்கமறியாத ஆசைகள்” சிறுகதைத் தொகுப்பை முன்னரே சந்தித்து வழங்கியிருந்தேன். அதை நினைவுகூர்ந்து நம் Filmsandfans குழுவில் ஆர்வமாக திரையனுபவங்கள் எழுதுபவர்கள் என அவருடன் சுவாரஸ்யமான உரையாடலாக மாறியது. ரசூல், கார்த்திக்குடனும் பிஸ்மி அவர்கள் மிக ஆர்வமாக பேசினார்.

அவருடைய தமிழ் சினிமா அனுபவங்கள் புத்தகமாக அச்சிலிருக்க 3 புத்தகங்கள் வாங்கி விடைபெற்றோம்.

வாங்கிய புத்தகங்கள் 14. அவை

1. ஒற்றை வைக்கோல் புரட்சி – மசானபு ஃபுகோகா – பூவுலகின் நண்பர்கள்
2. ஏற்றத்தாழ்வுகளின் கதை – பூவுலகின் நண்பர்கள் – ம. ஜியோடாமின்
3. பச்சை வியாபாரம் – ம. ஜியோடாமின் – பூவுலகின் நண்பர்கள் –
4. மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் – பூவுலகின் நண்பர்கள் – ம. ஜியோடாமின்
5. நான் நம்மாழ்வார் பேசுகிறேன் – விகடன் பிரசுரம்
6. மருந்தென வேண்டாவாம் – மருத்துவர் கு சிவராமன் – Vikatan Prasuram –
7. மானசா – லக்ஷ்மி பாலகிருஷ்ணன் – பாரதி புத்தகாலயம் –
8. சாதியற்ற தமிழர், சாதியத்தமிழர் – பக்தவசத்சல பாரதி
9. தமிழ் சினிமா : உள்ளே வெளியே – ஜெ. பிஸ்மி
10. தமிழ் சினிமா : சில நிகழ்வுகள், பதிவுகள் – ஜெ. பிஸ்மி
11. குறும்படங்களும்…ஆவணப்படங்களும் – ஜெ பிஸ்மி
12. நாட்டுக்கணக்கு – எழுத்தாளர் சோம. வள்ளியப்பன்
13. எதிர்சேவை – கலக்கல் டீரீம்ஸ் – நித்யா குமார்
14. பரிவை படைப்புகள் – கலக்கல் டீரீம்ஸ்- பரிவை சே குமார்


பொறுமையாக படித்ததற்கு நன்றி.

#ChennaiBookFair2023
#BookFair2023
#TamilLiterature
#TamilCinema
#தமிழ்இலக்கியம்
#தமிழ்சினிமா
#சென்னைபுத்தகக்காட்சி2023
#சென்னைப்புத்தகத்திருவிழா
#CBF2023
#சிவஷங்கர்ஜெகதீசன்
#SivashankarJagadeesan


Advertisement

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.