




சென்னை புத்தகக்காட்சி 2023 – முதல் முறை
நேற்று (20-Jan-2023) மாலை சென்னை புத்தகக்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு அமைந்தது.
அவசர அவசரமாக என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் ஒரு 24 புத்தகங்களை “புத்தக தானம்” செய்ய அள்ளிப்போட்டுக் கொண்டு மாலை 6 மணிக்கு மேல் கிளம்பி 2 மணி நேரத்திற்கும் குறைவாகவே செலவிட முடிந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீண்டும் செல்ல தயாராகிறேன்.
உள்ளே முதலில் சந்தித்தது பபாசி தலைவர் வைரவன் மற்றும் பாரதி புத்தகாலயம் தோழர் சிராஜுதீன் அவர்களை.
பபாசி தலைவர் வைரவன் அவர்களிடம் என் புத்தகத்தை அளித்து திரும்பினால் தம்பி செந்தில் வரதவேல் (யாப்பு வெளியீடு ).
அவரிடம் Saravanan Thangappa இருக்கும் அரங்கு எண்ணை சரியாக விசாரித்து விட்டுச் செல்ல சரவணனுக்கு நம்மை பார்த்ததும் ஆனந்தம்.
அவருடன் அரட்டை தொடர அவருடனே சென்று சிறைத்துறை அரங்கில் சிறைத்துறை DIG அவர்களிடம் என் புத்தகங்களை வழங்கினேன்.
அங்கிருந்து சுற்ற ஆரம்பித்ததில் யாவரும் பதிப்பகத்தில் எழுத்தாளர், இயக்குநர் Lakshmi Saravanakumar மற்றும் தோழர் ஜீவா கரிகாலன் ஆகியோரை சந்தித்து சில புத்தகங்களையும் வாங்கிக் கொண்டேன்.
“Shruti TV” Suresh Kumar ஐ பார்த்து பேச முடிந்தது. Sony Camcorder, DSLR மற்றும் புதிதாக China brand களில் வந்திருக்கும் Camcorder கள், நிகழ்ச்சிகளை cover செய்யும் போது அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளை கேட்டறிய முடிந்தது.
டிஸ்கவரியில் அண்ணன் Vediyappan M Munusamy மற்றும் Sanjai Gandhi M க்கு வணக்கம் வைத்து பேசி விட்டு ஒளிப்பதிவாளர், ஒளிப்பதிவு-ஆசிரியர் CJ Rajkumar அவர்களுடைய புத்தகங்களை தேடி எடுத்தேன்.
ஏற்கெனவே இவருடைய “பிக்சல் ” புத்தகம் படித்திருந்தேன். புதிய புத்தகமான “டிஜிட்டல் நிறங்கள்” ஐயும் கவிஞர், வசனகர்த்தா,இயக்குநர் Brindha Sarathy யின் “முக்கோண மனிதன்” கவிதைத் தொகுப்பையும் வாங்கிக் கொண்டேன்.
வெளியே வந்தால் இயக்குநர் மு களஞ்சியம் அவர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதே Thanappan Kathir ரும் வர ஆச்சரியமும் ஆனந்தமாக ஒரு சின்ன அரட்டை நடந்தது.
அருகில் இருந்த சுவாசம் அரங்கில் அண்ணன் Cable Sankar இன் “சினிமா வியாபாரம் 3.0” வாங்கினேன்.
வாங்கிய புத்தகங்கள் 8. அவை
1. ரமேஷ் பிரேதன் சிறுகதைகள் – யாவரும் அரங்கம் – ₹340
2. செல்லாத பணம் – இமையம் – யாவரும் பதிப்பகம் – ₹345
3. வெட்டாட்டம் – ஷான் கருப்பசாமி – யாவரும் பதிப்பகம் – ₹250
4. டிஜிட்டல் நிறங்கள் – ஒளிப்பதிவாளர் CJ Rajkumar – டிஸ்கவரி புக் பேலஸ் -₹300
5. க்ளிக் – ஒளிப்பதிவாளர் CJ Rajkumar – Discovery Book Palace – ₹350
6. முக்கோண மனிதன் – பிருந்தா சாரதி – டிஸ்கவரி புக் பேலஸ் -₹250
7. வாடிவாசல் – சி.சு செல்லப்பா – சுவாசம் – ₹100
8. சினிமா வியாபாரம் 3.0 – கேபிள் சங்கர் – சுவாசம் – ₹220
#ChennaiBookFair2023
#சென்னைபுத்தகக்காட்சி2023
#ChennaiCBF2023
#SivashankarJagadeesan
#சிவஷங்கர்ஜெகதீசன்
