ஆயிஷா – 2 லட்சமாவது பிரதி வெளியீட்டு விழா
ஒரு தமிழ் புத்தகம் 1000-10,000 பிரதிகள் தாண்டுவதே பெரிய சாதனை.
ஆயிஷா – 2 லட்சம் பிரதிகள் என்ற இலக்கை அடைந்திருப்பது மிகப் பெரிய சாதனை. அந்த கதையின் தாக்கம் அதன் ஆசிரியர் இரா. நடராசன் தன் பெயருக்கு முன் ஆயிஷா வை சேர்த்து அவருக்கான அடையாளமாக்கியது.
நேற்று நடந்த 5-Jan-2023(வியாழன்) விழாவில் ஆயிஷா இரா. நடராசன் அவர்களை சந்தித்து பேச முடிந்தது.
திரை இயக்குநர் சமுத்திரக்கனி, தோழர் ஜி ராமகிருஷ்ணன், சுட்டி கணேசன் அவர்கள் தோழர். நாகராஜன் என ஆயிஷா கதை அவர்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை பகிர்ந்து கொண்டனர்.


